குடிபோதையில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு !

0
குடிபோதையால் குற்றங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஏப்ரல் 25-ம் தேதிக்குள் விளக்க மளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
குடிபோதையில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு !
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக 

தொடரப்பட்ட வழக்கில் கோவையை சேர்ந்த வீராசாமி உட்பட இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏற்கனவே உத்தர விட்டிருந்தார். 

குடிபோதையில் விபத்துக்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்திருந்த நீதிபதி, 

இது போன்ற குற்ற சம்பவங்களில் மாநில அரசை குற்றத்திற்கு உடந்தையாக சேர்த்து தண்டனை விதிப்பதுடன் அபராதமும் விதிக்க முடியும் எனவும் கருத்து தெரிவித் திருந்தார்.

இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு நிலையான ஒரு நிலைபாட்டை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, குடி போதையால் நடைபெறும் 

குற்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தனி திட்டம் வகுக்க வேண்டியது அவசியம் என தெரிவித்தார். 

மேலும், இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல், அரசின் நிலைப் பாட்டை ஏப்ரல் 25-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தர விட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings