திமுக டோட்டல் டேமேஜ் - பாமக வேட்பாளர் சாம் பால் வைத்த செக் !

0
மத்திய சென்னை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக பாமகவைச் சேர்ந்த சாம்பாலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் sdpi அணியின் சார்பாக sdpi கட்சி சார்ந்த தெஹ்லான் பஹாவியும், மக்கள் நீதி மையத்தின் சார்பில் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் போட்டியிடு கின்றனர்.
திமுக டோட்டல் டேமேஜ்


இந்த தொகுதியில் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சாரத்தில் முன்னிலை யில் இருப்பவர் பாமகவின் சாம் பால் தான் என்பது அனைவரும் அறிந்தது. சாம் பால் தன்னுடைய பிரச்சாரத்திலும் தன்னுடைய தொலைக்காட்சி நேர்காணலில் எங்கேயுமே அடுத்த கட்சியின் தலைவர் களையோ, வேட்பாளர் களையோ புகார் தெரிவிப்பது குற்றம் சாட்டுவது இல்லாமல் அவருடைய திட்டங்கள், கட்சியின் திட்டங்கள், அந்தக் கூட்டணியின் வாக்குறுதிகள், சென்னைக்கு என்ன வெல்லாம் தேவை முதலிய வற்றை மட்டுமே முன்னிறுத்தி பிரசாரத்தை மேற்கொண்டு இருந்தார்.

எத்தனையோ ஊடகங்களில் எதிர் தரப்பு வேட்பாளர் பற்றி கேட்டபோது, அவர் அடுத்தவர் குறைகளை சுட்டிக் காட்டி வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை எனவும், நான் ஒரு நல்ல கட்சியின் சார்பில், நல்ல தலைவர் மருத்துவர் அய்யாவால் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளேன், அடுத்த ஐந்து வருடத்திற்கு ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் என்னால் மக்களுக்கு உழைக்க முடியும்.

நான் நற்பண்பு களை கொண்டவன், தன்னுடைய பழக்கங்களை குண நலன்களையும் தனித் திறமை களையும் சாதனை களையும் முன்னிலைப் படுத்தி மட்டுமே அவர் பிரச்சாரத்தை செய்து வந்தார். மேலும் அந்த கட்சி இதுவரை செய்த சாதனை களையும், அக்கட்சி செய்துள்ள போராட்டங்கள் அக்கட்சியின் தலைவர்கள், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மட்டுமே முன்னிறுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார்.

ஆனால் எதிர் தரப்பினர் தயாநிதி மாறன் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தாமல் அமைதி காக்க, திடீரென சில ஊடகங்களி லும், சமூக வலை தளங்களிலும் மத்திய சென்னை பாமக வேட்பாளரான சாம் பால் மது அருந்துவது போன்ற புகைபட மொன்று வைரலானது. அதுவும் தயாநிதி மாறன் உடனிருந்த உதவியாளர் ஒருவர் அந்த தகவலை பரப்பியதும் ஆதாரத்துடன் அம்பலமானது.

பாமகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருக்கும் சாம்பால் தான் அதற்கு தகுதியானவர் தான் என்பதை நிரூபிப்பது போல அவர் குறித்து எழுதப் பட்ட அவதூறு செய்திகள் அத்தனையும் ஆதாரத்துடன் எடுத்து வந்து, அவரது தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை யில் கூட்டணி கட்சி தலைவர்கள் வைத்துக் கொண்டு செய்தி யாளர்களை சந்தித்தார். இது தொடர்பாக விளக்க மளித்த சாம் பால் எதிர்கட்சிகள் மார்ஃபிங் செய்து பரப்பி அவதூறு செய்வதாக குற்றம் சாட்டினார்.


மேலும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த நிலையில், திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் பிரச்சாரத்தின் போது இந்த படம் குறித்து அவதூறு பரப்புரை செய்ததாகவும், செய்தி வெளியிட்ட தனியார் தொலைக் காட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையரக த்தில் புகார் அளித்தார். தற்போது திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது வேட்பாளர்கள் குறித்த தனிப்பட்ட தவறான விமர்சனம் என்பதால் தேர்தல் விதிமுறை களுக்கு மீறியதாகும். அதனால் தான் தயாநிதி மாறன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர் பார்க்கப் படுகிறது. இதனால் திமுக வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளது. 2 தனியார் தொலைக்காட்சிகள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)