முதன் முறையாக தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி !

0
மக்களவை தேர்தலில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் திமுக தலைமை அலுவலக மான அண்ணா அறிவாலய த்தில் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி
திமுக மகளிரணி செயலாள ராக இருக்கும் கனிமொழி தற்போது மாநிலங் களவை உறுப்பினராக இருக்கிறார். அவரது பதவிக்கால ஜூன் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே 2 முறை மாநிலங் களவை உறுப்பின ராக 12 ஆண்டுகள் கனிமொழி இருந்துள்ளார்.


தற்போது, மக்கள் மூலமாக நேரடியாக நாடாளு மன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது கனிமொழி யின் விருப்பமாக உள்ளது. இதை யொட்டி அவர் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் அவர் போட்டி யிடுவார் என்பது உறுதியாகி விட்டது.

இருப்பினும், விருப்ப மனு அளித்த பிறகு பேட்டி யளித்த கனி மொழி, தலைமைக் கழகம் முடிவு செய்த பின்னர் தான் தூத்துக் குடியில் தான் போட்டி யிடுவது இறுதி செய்யப்படும் என்று கூறினார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியைப் பொறுத்த வரையில், ஸ்ரீ வைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப் பிடாரம், கோவில் பட்டி, விளாத்தி குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. 

இவற்றில் திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே திமுக வசம் உள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings