50 லட்சம் ரூபாய் பணம் அ.தி.மு.க காரில் - திருவாரூர் போலீஸ் !

0
திருவாரூர் அருகே 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. வாகனத்தில் வந்தவர் களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் நாடாளு மன்றத் தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தில் 18 தொகுதிகளு க்கான இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது. 
அ.தி.மு.க காரில் 50 லட்சம் ரூபாய் பணம்


இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலும் இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது. அதனை யொட்டி நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் 24 இடங்களில் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை களும் செய்யப்பட்டு வருகின்றன.

இன்று காலையில் திருவாரூர் அருகே கானூர் என்ற இடத்தில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது நாகப்பட்டினத்தி லிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அ.தி.மு.க கொடி பொருத்திய சொகுசு காரை காவல் துறையினர் சோதனை செய்தனர். 

அப்பொழுது வாகனத்தின் பின்புறம் இருந்த கறுப்புப் பையில் உரிய ஆவணங் களின்றி 50 லட்சம் ரூபாய் பணம் இருந்ததைக் காவல் துறையினர் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். இதை யறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் மற்றும் திருவாரூர் மாவட்ட எஸ்பி துரை ஆகியோர் வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது வாகனத்தை ஓட்டிவந்த சாகுல் ஹமீது என்பவர் எனக்கு நாகப்பட்டினம் சுந்தர்ராமன் டிரான்ஸ்போர்ட் க்குச் சொந்தமான புதிய பேருந்துக் கட்டுமான பணி திருச்சியில் நடைபெற்று வருகிறது. அதற்காக இந்தப் பணத்தை எடுத்துச் செல்கிறேன் எனவும் தெரிவித்தார். 
50 லட்சம் ரூபாய் பணம்


இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் துரை ஐ.பி.எஸ் செய்தி யாளர்களிடம் கூறியதாவது. நாகை நாடாளுமன்றத் தொகுதியில் 24 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் ரவுடி பட்டியலில் உள்ள 78 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் 12 பறக்கும் படைகள் 12 கண்காணிப்புப் படைகள் அமைக்கப் பட்டுள்ளன. வாகன சோதனை களும் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு சோதனை செய்த போது தான் உரிய ஆவணங்க ளின்றி 50 லட்சம் ரூபாய் பணம் பிடிபட்டுள்ளது எனவும் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings