ரஃபேல் விமான ஆவணங்கள் திருடு போகவில்லை - மத்திய அரசு !

0
ரஃபேல் ஆவணங்கள் ராணுவ அமைச்ச கத்தில் இருந்து திருடப் பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் தெரிவித்த நிலையில், தற்போது ரஃபேல் விமான கொள்முதல் ஆவணங்கள் திருடப்பட வில்லை என்றும் மனுதாரர் களால் அதன் நகல்கள் எடுக்கப் பட்டுள்ளன என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித் துள்ளார்.
ரஃபேல் விமான ஆவணங்கள் திருடு போகவில்லை - மத்திய அரசு !
ரஃபேல் விமான கொள்முதல் ஆவணங்கள் திருடப் பட்டதாக அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால் கூறியதுத பெரும் சர்ச்சையை ஏற்படுத் தியது. இவ்வளவு முக்கியத் துவமான ஆவணங்கள் திருடப்படும் அளவிலே மத்திய அரசு உள்ளது என ராகுல் காந்தி கடுமை யாக விமர்சித்து வந்தார். 


மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி வருகிறார். இதேபோல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாயாவதி, சரத் பவார் உள்ளிட்டோரும் அரசை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இதனால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் விதத்தில் தனது நிலைப் பாட்டை மாற்றிய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால், பிடிஐ செய்தி நிறுவனத் திடம் கூறும் போது, பாதுகாப்பு அமைச்சக த்தில் இருந்து ஆவணங்கள் திருடப் பட்டதாக எதிர் கட்சிகள் வாதாடி வந்தன. ஆவணங்கள் திருடப் பட்டதாக கூறப் படுவது முற்றிலும் தவறானது.

யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் தாக்கல் செய்த 3 ஆவணங் களும், அசல் ஆவணங் களின் நகல்கள் ஆகும். நகள்களையே அவர்கள் பயன்படுத்தி உள்ளனர் என்று அவர் கூறி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)