தேமுதிக கட்சி வேட்பாளர் பட்டியல் !

0
வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க அதிமுக, தேமுதிக என இரண்டு கூட்டணியி லும் ஒரே நேரத்தில் பேச்சு வார்த்தை நடத்தி ஊடகங்களில் அசிங்கப்பட்ட தேமுதிக, கடைசியில் திமுகவின் கதவு அடைக்கப் பட்டதால் அதிமுக கொடுத்த நான்கு தொகுதிகளு க்கு ஒப்புக் கொண்டு கூட்டணி அமைத்தது.
தேமுதிக  வேட்பாளர் பட்டியல்


இந்த நிலையில் தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் விருதுநகர் என நான்கு தொகுதிகள் ஒதுக்கப் பட்டிருந்த நிலையில் இந்த நான்கு தொகுதிகளுக்கும் தற்போது வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப் பட்டுள்ளது. தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் இதோ:

கள்ளக்குறிச்சி - எல்.கே.சுதீஷ்

வடசென்னை - அழகாபுரம் மோகன்ராஜ்

திருச்சி - டாக்டர் இளங்கோவன்

விருதுநகர் - ஆர்.அழகர்சாமி

இந்த தேர்தலில் தேமுதிக வின் பொருளாளர் பிரேமலதா போட்டியிடுவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இல்லாதது அக்கட்சியின் தொண்டர் களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறப்படுகிறது
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)