செய்தியாளர்கள் சந்திப்பில் சர்ச்சை - பிரேமலதா !

0
மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தை சூடுப்பிடிக்க தொடங்கி யுள்ளது. திமுக-வின் கூட்டணி அறிவிப்பு இறுதியான நிலையில் தேமுதிக-வின் கூட்டணி யாருடன்? என்பது பெரும் இழு பறியாக நீடித்து வருகிறது. 
செய்தியாளர்கள் சந்திப்பில் சர்ச்சை


இதனிடையே மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் சுதீஷ் பேச்சு வார்த்தை நடத்திய அதே நேரத்தில் தேமுதிக நிர்வாகிகள் துரை முருகனை சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இதன் மூலமான திமுகவுக்கும் - தேமுதிக வுக்குமான வார்த்தைபோர் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில் செய்தி யாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரமலதா கூறியதாவது, கூட்டணி தொடர்பாக வெகு விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு வெளியாகும். திமுக மற்றும் அதிமுக இருதரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தியது என யார் உங்களுக்கு சொன்னது?.

கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை, எந்த குழப்பமும் இல்லை. மரியாதை நிமித்தமாக வீட்டிற்கு சென்றால் உபசரிப்பது தான் தமிழர் பண்பாடு. பெரிய மனிதர் என்று நம்பிதான் தேமுதிகவினர் துரை முருகன் இல்லம் சென்றனர். திமுக என்றாலே 'தில்லு முல்லு கட்சி தான்'. இதனை எப்போதும் உறக்க கூறுகிறேன். 

இது தான் உங்கள் அரசியல் சூழ்ச்சியா? வீட்டிற்கு வரவழைத்துத் தான் திமுகவினர் அரசியல் சூழ்ச்சியை கையாள வேண்டுமா? கலைஞர் உடல் நலமில்லாமல் இருந்தபோது அவரை விஜயகாந்த் பார்க்க மு.க.ஸ்டாலின் கடைசி வரை அனுமதிக்க வில்லை. தேமுதிகவை பழிவாங்கும் நோக்கத் துடனே திமுக நடந்து கொள்கிறது. 

பியூஷ் கோயலுடன் பேச்சு வார்த்தை நடத்தும் போது, துரை முருகனுடன் பேச்சு வார்த்தை நடத்த வில்லை. தேமுதிக நிர்வாகிகள் தனிப்பட்ட முறையிலே சந்தித்துள்ளனர். அவர்கள் கூட்டணியை இறுதி செய்து மாநாடு அளவிற்கு சென்ற பின்னர் அவர்களிடம் எப்படி கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவோம் என்று அவர் கூறினார்.


பாமகவை முதலில் அழைத்து கூட்டணி உடன்பாட்டில் கையெழுத் திட்டதால் தான் எல்லா குழப்பமும் ஏற்பட்டது. மணப்பெண் இருந்தால் பத்துபேர் பெண் கேட்டு வரத்தான் செய்வார்கள். அது போல் தான் தேர்தலிலும். யாரையும் மிரட்டி தேமுதிக வை பணிய வைக்க முடியாது. தேமுதிக வின் கொள்கையில் உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.

இதனிடையே, செய்தி யாளர்களுடன் பேசும்போது நீ, நா, போ, என்று செய்தி யாளர்களை பிரமலதா ஒருமையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு செய்தி யாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால், செய்தி யாளர்களின் சந்திப்பின் போதே இரு தரப்புக்கும் கடும் வாக்கு வாதம் எழுந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings