தூங்கும் போது உங்களை அமுக்கும் பேய் இது தான் !

0
அன்று அலுவலகத்தில் மூன்று பேர் வரவில்லை. கூடுதல் வேலை. நீங்கள் இரவு வீட்டுக்கு வரவே 11 மணி ஆகி விடுகிறது (It is 11 o'clock when I get home at night.). 
அமுக்கும் பேய்
கிடைத்ததைக் கொறித்ததில் பசி அடங்கியும், அடங்காத நிலை. படுத்தால் போதும் எனக் கலைந்தப் படுக்கையில் தஞ்சம். 
விளக்குகள் அணைக்கப் பட்டதும், நீங்கள் தழுவிக் கொண்ட போர்வையைப் போல தூக்கமும் உங்களைத் தழுவியதாய் நினைப்பு. இருளில் உங்கள் உணர்வுகளை நழுவ விடுகிறீர்கள். 

அரை மணி நேரம் கடந்திருக்காது. விழித்தோமா இல்லையா என்று புரியாத ஓர் இருட்டில் முழிப்பு வருகிறது. ஆனால், நகர முடிய வில்லை. 

இப்போது அந்தத் தனியறையில் நீங்கள் தனியாக இல்லையென்ற ஓர் உள்ளுணர்வு. எழுந்து பார்க்கலாம் என்று முயன்றால், உங்கள் உடல் உங்கள் கட்டுப் பாட்டில் இல்லை. 

சவ நிலை என்று சொல்வார்களே, அப்படி ஒரு நிலை, உங்கள் உடலுக்கு மட்டும். இது போதாதென்று முகத்தை யாரோ எதையோ வைத்து அமுக்கியது போன்ற எண்ணம் வேறு உதயமாகிறது. 
உயிர்க் காற்று உள்ளே செல்ல மறுக்கிறது. மூச்சுத் திணறல். கதற வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்தும் குரல் உங்கள் குரல் வளையை விட்டு வெளியே வர மறுக்கின்றது. 

சிறிது நேரத்தில் (In a short time), அறையில் யாரோ இருப்பதாய் தோன்றிய உள்ளுணர்வு உயிர் பெறுகிறது, ஏற்கெனவே, உங்களுக்கு சர்க்கஸ் கோமாளிகள் என்றால் பயம். 

அப்படி ஓர் உருவம், முதலில் அருவமாக, நிழலாகத் தோன்றி பின்பு உயிர் பெறுகிறது. உங்களை அது நெருங்குகிறது. நெருங்க நெருங்க உங்கள் மூச்சுக் குழாய் இறுகுகிறது.

பயத்தின் உச்சமாக (The pinnacle of fear), இப்போது வெளியே இடி, மின்னல், மழை என ஒன்றின் பின் ஒன்றாக (One after the other). வித்தியாச மாக முதலில் இடிக் கேட்கிறது, பின்பு தான் மின்னல். 

அந்த நொடி, உங்களுக்கு உண்மையை உரைக்கிறது. ஒளிக்குப் பின்னர் தானே ஒலி? கட்டிலின் விளிம்பைத் தேடிப்பிடித்து, சட்டென எழுகிறீர்கள். இப்போது அந்த உருவம் இல்லை. 

வெளியே இடி, மின்னல், மழை இல்லை. முகத்தைக் கழுவி விட்டு, ஒரு குவளை நீர் குடித்து திரும்பப் படுத்தவுடன் தூக்கம் நன்றாக வருகிறது. அதன்பிறகு, எல்லாமே சுபம் தான். 
உடல் வலிமை பெற மூங்கில் அரிசி !
ஏதோ கதைபோலத் தோன்றி னாலும், அந்த ஒளி, ஒலி வேறு பாட்டைத் தவிர, மீதி அனைத்தும் நிச்சயம் உங்களின் வாழ்விலும் நடந்திருக்கும். 

அந்தக் கோமாளி உருவத்துக்குப் பதில் வேறு ஓர் உருவம், அவ்வளவே! இதைப் பற்றி பாட்டியிடம் கேட்டால், “அமுக்குவான் பேய்ப்பா அது… தெரியாதா? வா கோயிலுக்குப் போய் மந்திரிக்கணும்” என்பார். 
முக்குவான் பேய்
ஆனால், இந்த நிலை எதனால் ஏற்படுகிறது? இதற்கான அறிவியல் விளக்கம் என்ன? ஆங்கிலத்தில் இதை ‘Sleep Paralysis’ என்று அழைக்கிறார்கள். 

இது ஏற்பட முக்கியக் காரணம் உடல் அடுத்தடுத்த உறக்க நிலைகளுக்குச் சீராக செல்ல மறுப்பது தான். 

கர்ப்பிணி பெண்களுக்கு எந்தெந்த சத்துக்கள் அவசியம் ! 

பல நூற்றாண்டு களாக இதன் அறிகுறிகள் பேய் பிடித்த நிலை, சாத்தானின் தலையீடு, ஏவல் செய்ததால் துரத்தும் துஷ்ட சக்திகள் போன்ற வற்றுக்கு தொடர்புப் படுத்தப்பட்டு வருகின்றன. 

ஆனால், இது உடல் சோர்வினால் ஏற்படக் கூடிய ஒரு சாதாரண பிரச்னை தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த நிலை ஏற்பட முக்கியமான காரணமாக கூறப்படுவது, உணர்வு களைக் கடத்தும் நம் நியூரான் செல்களில் ஏற்படும் குழப்பம் தான். 

தூக்கத்தைக் கட்டுப் படுத்தும் நரம்புகள் அதைச் சரிவர செய்யாமல் போவதால், பல்வேறு தூக்க நிலைகள் சீராக ஏற்படாமல், ஒன்றோடு ஒன்று பிணைந்து குழப்பம் ஏற்படுத்து கிறது. 
விழிப்பு நிலைக்கும், உறக்க நிலைக்கும் நடுவில் நீங்கள் தடுமாறுவ தால், இங்கே உங்கள் உடல் தூக்கத்தில் இருக்கிறது, உங்கள் ஆழ்மனது முழு விழிப்பு நிலையில் இருக்கிறது. 

தூக்கத்தின் முதல் நிலையான REM ஸ்லீப் எனப்படும் ‘கண்கள் மூடிய நிலையிலும் கருவிழிகள் இயங்கும் நிலை’ தாண்டி இங்கே அடுத்த நிலைக்கு உறக்கம் செல்ல வில்லை. 

மூச்சு விடுதல் போன்ற இயல்பான உடல் இயக்கங்கள் தொடர்ந்து நிகழ்ந்தாலும், உங்கள் உடல் செயல்பட மறுக்கிறது. ஏனென்றால், அதற்கு அப்போது ஓய்வு தேவை. 

கிட்டத்தட்டத் தொழிலாளர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் போல தான் நம் உடலும் இங்கே வேலை நிறுத்தம் செய்கிறது. 

அதைக் கட்டுக்குள் கொண்டுவர, இங்கே நம் மூளை ஒரு விந்தையை நிகழ்த்து கிறது. உங்களின் உடல் எழ வேண்டும், நீங்கள் தூக்கத்தி லிருந்து விடுபட வேண்டும் என்பதே அதன் விருப்பம். 

நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?

எனவே, உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போல ஒரு பிரமையை ஏற்படுத்து கிறது. மிகுந்த சிரமத்துக்கு உண்டானாலும், உங்கள் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. 

உடனே, உங்கள் மூளை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கிறது. உங்கள் அறைக்குள் யாரோ இருப்பது போன்றும், அந்த உருவம் உங்களைத் தாக்க வருவது போன்றும் ஒரு காட்சியை கண் முன்னே ஓட்டிக் காட்டுகிறது. 

அதிலிருந்து தப்பிக்க, அல்லது திரும்பத் தாக்க உடல் எழுந்து தானே ஆக வேண்டும்? இது மிரட்டி மடியாத செல்லப் பிள்ளையை அடி கொடுத்து வேலை வாங்குவது போல தான். 

பெரும்பாலோ னோர்க்கு இந்த நிலையிலேயே உடல் இயக்கம் வந்து விடும். எழுந்து விடுவார்கள். அப்படியும் உடல் ஒத்துழைக்க மறுத்தால், மீண்டும் பயமுறுத்த மூளை தயாராகும். 
Sleep Paralysis
சுற்றுப் புறத்தில் ஒரு பெரிய ஆபத்து சூழ்ந்திருப்பது, கால்கள் மற்றும் கைகளில் ஏதேனும் பொருள்கள் கொண்டு வலி உருவாகும் வகையில் தாக்குதல் நடக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது, 

விதவிதமான அச்சம் ஏற்படுத்தும் எண்ணங் களைத் தோற்றுவிப்பது என எல்லா முயற்சி களையும் எடுக்கும். ஒரு வழியாக உங்களைக் காப்பாற்றி யும் விடும். 
உடல் இயக்கத்தை சீராக்கி விடும். சரி, இந்த ‘Sleep Paralysis’ எதனால் ஏற்படுகிறது? தூக்க மின்மை, அதீத உடல் உழைப்பு, சரியான நேரத்தில் உணவு உண்ணா திருத்தல், உறங்காது இருத்தல், மன அழுத்தம் போன்றவை இதற்கு வழிவகுக்கும். 

மிகவும் அரிதாக மட்டுமே, இது மனநோய்கள் உடன் இணைத்துப் பேசப்படு கிறது. இந்த நிலை ஏற்பட்டால், எதுவும் பயப்படத்தேவை இல்லை. 

சீரான உடல் இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். எல்லா வற்றையும் சரியான நேரத்தில் செய்யுங்கள். பிரச்னை தொடர்ந்தால் மட்டும் மருத்துவரை அணுகுங்கள்.
கொஞ்சம் ஆங்கிலம்...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)