சளி என்றால் என்ன?





சளி என்றால் என்ன?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
சளி என்றாலே எல்லோருக்கும் ஒரு அருவருக்கத் தக்க விஷயம் ! அந்த வளவளப்பான விஷயத்தை வெறுக்காத வர்கள் பூமியில் உண்டா என்ன? ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள்! 

சளி என்றால் என்ன?
இது இயந்திரத்தின் பாகங்களில் போடப்படும் எண்ணெயை போன்றது! சளி என்ற ஒன்று நம் உடம்பில் இல்லை என்றால் , நம் உடம்பில் உள்ள பாகங்கள் எல்லாம் பழுதடைந்து தன் வேலையை நிறுத்திவிடும்!

வியப்பாக இருக்கிறது அல்லவா (Isn't that amazing!)! மேலும், சளி பற்றிய பல தெரியாத தகவல்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்…

சளி நம் உடம்புக்கு மிக அவசியமான ஒன்று (Cold is one of the most essential for our health)! சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், நம் வாய், மூக்கு, தொண்டை, நுரையீரல், இரைப்பை குடல் ஆகிய எல்லாவற்றிலும் ஒரு உட்பூச்சு கொடுத்தாற் போல் அமைந்து அவை அனைத்தையும் பாதுகாப்பு கவசம் போல பாதுகாக்கின்றன.
தூசி, பாக்டீரியா, வைரஸ் போன்றவை , நாம் சுவாசிக்கும் காற்றோடு சேர்ந்து நம் நுரையீரலின் உள்ளே சென்று விடாமல் தடுக்கும் ஒரு வடிகட்டி போலவும் செயல் படுகிறது.

சளியின் பிசுபிசுப்பு தன்மை அதற்கு இவ்விஷயத்தில் கை கொடுத்து உதவுகிறது. மேலும் சளியில், பாக்டீரியா வைரஸ்களை, நம் உடம்பு கண்டு கொள்வதற்காக , பிறபொருளெதிரிகளும் (Antibodies), 

இவ்வாறு எல்லை மீறி நுழைபவர்களை கொன்று குவிப்பதற்காக நொதிகளும் (enzymes ), பிசுபிசுப்பு தன்மையை ஏற்படுத்துவதற்காக புரதங்களும் (Protein ), பல்வேறு உயிரணுக்களும் (Cells ) நிறைந்து இருக்கின்றன..
சளி என்றால்
நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுதும், உங்கள் 👉உடம்பு சளியை உற்பத்தி செய்து கொண்டே தான் இருக்கும். ஒரு நாளைக்கு, ஒன்றில் இருந்து ஒன்றரை லிட்டர் சளியை நம் உடம்பானது உற்பத்தி செய்கிறது!

ஒரு உதாரணத்துக்கு ,தூசியோ, நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் ஏதோ ஒரு பொருள், நம் மூக்கினுள் நுழைந்து விடும் போது, சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி விடுகின்றது.. 

அதாவது ,இந்த மாதிரி தருணங்களில் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் (Mast cells ), ஹிஸ்டமைன் (Histamine ) என்ற வேதி பொருளை, வெளிப்படுத்துகின்றன.
இந்த ஹிஸ்டமைன் ஆனது , உடனே தும்மல் , அரிப்பு , மூக்கில் ஏதோ திணித்து வைத்தாற் போன்றதொரு உணர்வு , போன்றவற்றை தூண்டி விடுகிறது. 

இவ்வாறு தூண்டப்பட்டவுடன், சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், சளியை தண்ணீரை போன்று கசிய விட, நம் மூக்கு திறந்து விட்ட குழாயை போல ஓட ஆரம்பிக்கின்றது !

சிலருக்கு சுவைப்புலன் நாசியழற்சி (gustatory rhinitis ) பிரச்சனை இருப்பதாலும் மூக்கு திடீரென்று ஓட ஆரம்பிக்கும்.. அதாவது, மிகுந்த காரமான உணவை எடுத்து கொள்ளும் போது (When taking spicy food) இந்த பிரச்சனை உண்டாகும். 

மற்றும் சிலருக்கு, பால் பொருட்களை (Cow’s Milk Protein Allergy (CMPA)) எடுத்து கொள்ளும் போது, அவர்கள் உடம்பில் சளியின் உற்பத்தி அதிகமாகும் (The production of mucus in the body is high.).

பெரும்பாலும் இந்த சளியானது, தெள்ளத்தெளிவாக எந்த நிறமும் இன்றி காணப்படும். ஆனால், உங்களுக்கு சளி (Cold) பிடித்திருக்கும் போது, உங்கள் மூக்கின் வழியே வெளியிடப்படும் சளியின் நிறம், 

மஞ்சள் அல்லது பச்சை வண்ணத்தில் காணப்படும். உடனே, பாக்டீரியா உடம்பின் உள்ளே நுழைந்து, நோய் தோற்று ஏற்பட்டு விட்டது என்று எந்த அர்த்தமும் இல்லை. 
உங்களுக்கு சளி பிடித்திருக்கும் போது, உங்கள் உடம்பின் 👉நோய் எதிர்ப்பு அமைப்பு, நியூட்ரோபில்ஸ் (Neutrophils) என்னும் வெள்ளை இரத்த அணுக்களின் படையை அனுப்பும். 

இந்த வெள்ளை இரத்த அணுக்களில் ஒரு பச்சை நிற நொதி (Enzyme) உண்டு.. இந்த பச்சை நிறத்து நோதியே, உங்களை பிடித்து தொந்தரவு செய்யும் சளியின் பச்சை நிறத்தின் பின்னணியில் இருப்பது! 

சில சமயம், சளி தெள்ள தெளிவாக, எந்த நிறமும் இன்றி காணப்படும்.. ஆனால், உங்களுக்கு, காது நோய்த்தாக்கம் (Ear Infection ) மற்றும் சைனஸ் நோய் இருக்க கூடும்! ஆக, சளியின் நிறத்தை வைத்து கொண்டு எந்த கணிப்பும் செய்து விட முடியாது! 
நோய் தோற்று
அப்படியே, 👉நோய் தொற்று ஏற்பட்டு இருந்தால், சளியின் தொந்தரவோடு, மூக்கடைப்பு, காய்ச்சல் போன்ற பிற தொந்தரவுகளும் ஏற்பட்டு நோய் தொற்றை வெளிச்சம் போட்டு காட்டி கொடுத்து விடும்!

சில சமயங்களில் சளியோடு சேர்ந்து, சிகப்பு அல்லது பிரவுன் நிறத்தில் இரத்தம் காணப்படும்! இரத்தம் சிறிதளவில் காணப்பட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லை.. 

நீங்கள் அதிகமாக மூக்கை சீறுவதால், இல்லை கைகளால் மூக்கை தேய்த்து கொள்வதால், மூக்கில் உள்ள இரத்த குழாய்கள் சேதமுற்று, சிறிது இரத்தம் வந்திருக்கலாம்.. 

அதிக அளவு உதிர போக்கு இருந்தால், மருத்துவரை அவசியம் பார்த்து விடுவது நல்லது! நோய் தொற்று ஏற்படும் பொழுது என்ன ஆகின்றது? (What happens when an infection occurs?) 👉சைனஸ் பிரச்சனையும், அதிக சளியால் அவதியும் ஏற்படுகிறது! 
கொஞ்சம் ஆங்கிலம்...
Tags: