பாலகோட் முகாம் மீது தாக்குதல் நடத்தியது ஏன்? அதிர்ச்சி தகவல் !

0
பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற் கான காரணம் குறித்த புதிய தகவல்கள் வெளி வந்துள்ளன. காஷ்மீரை ஒட்டி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளது. அங்கிருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் பாலகோட் பகுதி அமைந்தி ருக்கிறது. இந்த இடத்தில் தான் தற்கொலைப் படை தீவிரவாதி களுக்கு பயிற்சிகள் அளிக்கப் படுவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. 
பாலகோட் முகாம் மீது தாக்குதல் நடத்தியது ஏன்?


மலை உச்சியில் அமைந்தி ருக்கும் பாலகோட்டை அடர்ந்த வனங்கள் சூழ்ந்து மறைவையும் பாதுகாப்பை யும் அளிக்கின்றன. உளவுத் துறையின் தகவல்படி, புல்வாமா தாக்குதலை தொடர்ந்து அடுத்த தாக்குதலை நடத்து வதற்கு தீவிரவாதிகள் தயாராகி வந்தனர். 

அவர்களுக்கு பாலகோட்டில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததால், அங்கு அடித்தால் தான் சரியானதாக இருக்கும் என்று உளவுத் துறையினர் தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் இந்திய விமானப் படையின் மிராஜ் 2000- ரகத்தை சேர்ந்த 12 விமானங்கள், பாலகோட்டில் குண்டு மழை பொழிந்துள்ளன. 

பாலகோட் தீவிரவாத முகாமை, புல்வாமா தாக்குதலுக்கு மூளை யாக செயல்பட்ட மசூத் அசாரின் மைத்துனர் தான் நிர்வகித்து வந்துள்ளார். இதே இடத்தில் ஆண்டுக் கணக்கில் தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்திருக் கின்றனர். எனவே தான் பாலகோட் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

இங்கு தீவிரவாதி களுக்கு பயிற்சி அளித்தவர்கள் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத்தினர். நவீன ரக துப்பாக்கிகள், யுத்த தந்திரங்கள், வெடி குண்டுகளை தயாரிப்பது, தற்கொலைப் படை தாக்குதல், ராணுவ வாகனங் களை ஹைஜாக் செய்வது, மிக மோசமான சுற்றுச் சூழலில் தற்காத்துக் கொள்வது போன்ற மிக கடுமையான பயிற்சிகள் தீவிரவாதி களுக்கு வழங்கப் பட்டுள்ளது.


பாலகோட் தீவிரவாத முகாம் குன்ஹார் ஆற்றின் அருகே அமைந்தி ருப்பதும் தீவிரவாதி களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப் படுகிறது. இந்த இடத்திற்கு மசூத் அசாரும், மற்ற முக்கிய தீவிரவாத தலைவர்களும் அடிக்கடி வருவார்களாம். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சொந்தமான இடங் களுக்கு மிக அருகில் தான் பாலகோட் உள்ளது. எனவே இது பற்றி அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்று இந்தியா தரப்பில் கருதப் படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings