யூசுப் அசார்? பாலகோட் மையத்தின் பின்னணி !

0
பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் -இ -முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் மீது இன்று அதிகாலை இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. 
யூசுப் அசார்? பாலகோட் மையத்தின் பின்னணி
இந்த தாக்குதலில் 200 தீவிரவாதிகள் வரை உயிரிழந் ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 14-ஆம் தேதி ஜம்மூ- காஷ்மீரின், ஸ்ரீநகர் நெடுஞ் சாலையில் 78 வாகனங்களில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டி ருந்தனர். 

அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவன், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினான். 
இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலு க்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் -இ -முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் பாலகோட்டில் செயல்பட்டு வருகிறது. 
இந்த பயிற்சி முகாமில் இருந்து கொண்டு தான் இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டங்களை தீவிரவாதிகள் தீட்டியும், செயல் படுத்தியும் வந்தனர். பயிற்சி முகாமில் 600 பேர் தங்கும் அளவுக்கு வசதிகள் உள்ளன. 

ஜெய்ஷ் இ முகமதுவின் கமாண்டர் மசூத் அசாரின் சகோதர்ர் முப்தி அப்துல் அமீர்தான் ஜெய்ஷ் இ முகமதுவு க்கு பொறுப்பாள ராக இருக்கிறார். 

அவர் ஆண்டு தோறும் நடைபெறும் அணிவகுப்பில் மட்டும் கலந்து கொள்கிறார். 
முகாமில் காணப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் நாட்டு கொடிகள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் தீவிரவாதிகள் சித்தரிப்பு செய்துள்ளனர். 
பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ.-ன் தூண்டுதலின் பேரில் பாலகோட் தீவிரவாத முகாமில் 250-க்கும் அதிகமான தீவிரவாதிகள் பயிற்சி பெற்று சென்றுள்ளனர். 

வெடி மருந்து கிடங்கும், சுமார் 200-க்கும் அதிகமான ஏ.கே. 47 துப்பாக்கி களும் டெட்டனேட்ரடர் உள்ளிட்ட பயங்கர வெடி மருந்துகளும் ஒரு கிடங்கில் பதுக்கி வைக்கப் பட்டுள்ளன. 

பாலகோட் பயிற்சி முகாமுக்கு ஜெய்ஷ் இ முகமதுவின் மைத்துனர் மவுலானா யூசுப் அசார் இதற்கு பொறுப்பா ளராக இருந்துள்ளான். 
இந்திய விமானப் படையைச் சேர்ந்த 12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள், நாட்டின் எல்லையைத் தாண்டி லேசர் வசதி கொண்ட 1,000 கிலோ வெடிகுண்டு களை இலக்குகள் மீது போட்டுள்ளன. 

முதல் வெடிகுண்டு இன்று அதிகாலை 3:45 மணிக்கும், அடுத்த தாக்குதல் 3:48 மணிக்கும் அதற்கடுத்த தாக்குதல் 3:58 மணிக்கும் மேற்கொள்ளப் பட்டதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. 
மொத்த தாக்குதல் ஆபரேஷனும் 19 நிமிடங் களுக்குள் முடிந்து விட்டதாக கூறப் படுகிறது. அதில் ஜெய்ஷ் -இ -முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் யூசுப் அசாரும் கொல்லப் பட்டான். 

யூசுப் அசார் 1999-ம் ஆண்டு ஏர்பஸ் IC 814 விமானத்தை கடத்தியவன் ஆவான். புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 12 நாட்களில் இந்திய விமானப்படை பதிலடி கொடுத் துள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings