கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சேராபட்டு என்னும் இடத்தில் உள்ளது கல்வராயன் மலை. 
ஏழைகளின் மலைப் பிரதேசம் கல்வராயன் மலை !
கல்வராயன் மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியாகும். ஓங்கி உயர்ந்த பச்சை பசும் மரங்களும், ஆர்ப்பரிக்கும் அருவிகளும், 

பறந்து திரியும் பறவைகளும், வன விலங்குகளும் காணப்படும் இடமாக உள்ள கல்வராயன் மலையை ஏழைகளின் மலை வாசஸ்தலம் என அழைக் கின்றனர்.

இங்கு அச்சமடைய வைக்கும் கொண்டை ஊசி வளைவுகளும் பல உள்ளன. 

இந்த மலை பச்சைமலை, ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை ஆகிய வற்றுடன் காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்தி லிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. 

1095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலையின் உயரம் 2000 முதல் 3000 அடி வரை உள்ளது. கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. 

அதில் வடபகுதி சின்னக் கல்வராயன் என்றும் தென்பகுதி பெரிய கல்வராயன் என்றும் குறிப்பிடு கின்றனர்.
இதில் சின்னக் கல்வராயன் மலைகள் சராசரியாக 2700 அடி உயரமும், பெரிய கல்வராயன் மலைகள் சராசரியாக 4000 அடி உயரமும் கொண்டுள்ளது. 

கல்வராயன் மலையின் வரலாறு விஜய நகர் ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி கிருஷ்ண தேவராயரின் காலப்பகுதியை சேர்ந்தது. 

கிருஷ்ண தேவராயர் இந்த நிலத்தை அனுபவிக்கும் உரிமைகளை பழங்குடியின ருக்கு வழங்கினார். 

ஆனால் ஏகப்பட்ட வரிகளை சுமத்தியதாக கூறப்படு கிறது. மலையடி பழங்குடியினர்களில் காராளன் என்று அழைக்கப்படும் மக்களின் பூர்வீக வாழ்விடமாகும். 

இவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து வந்து கல்வராயன் மலைகளில் குடியேறிய தாக கூறப்படுகிறது. 

பின்னர், அவர்கள் வேட்டைக்காரர் என அழைக்கப்படும் பழங்குடி மக்களை விரட்டி அவர்களின் மனைவிகளை மணந்தார்கள். 

தற்போது வேடர் சமூகங்களை மலையாளி என்று அழைத்த போதிலும், அவர்கள் தங்களை கவுண்டர்கள் என்று கூறுகிறார்கள்.
கல்வராயன் மலைகளில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளது. இங்கு நீர்வீழ்ச்சிகள், நீரோடைகள், ஆறுகள் மற்றும் அருமையான ஜங்கிள் நடை போக இடங்கள் போன்றவை அமைந்துள்ளன. 

இந்த இடம் மலையேற்றம் செய்பவர் களுக்கு சொர்க்கமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற நீர் வீழ்ச்சிகள் உள்ளது. 

இங்கு உள்ள நீர்வீழ்ச்சி களை காண்பதும் குளிப்பதும் சுற்றுலா பயணிகளுக்கு ஆனந்தமாக உள்ளது. கல்வராயன் மலை செல்பவர்கள் கோமுகி அணையைப் பார்க்காமல் திரும்ப மாட்டார்கள். 

ஏன்னென்றால் அங்கு குழந்தைகள் பூங்காவும், ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, படகு குழாம் உருவாகியுள்ளது. 
ஏழைகளின் மலைப் பிரதேசம் கல்வராயன் மலை !
காட்டுப் பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளைத் பார்க்கும் அரிய வாய்ப்பும் கிட்டுகிறது. 

கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்கு ஏற்ப வனத்துறையினர் விடுதிகள் அமைத்திருக்கின்றனர். 

இங்கு வனத்துறையி னரிடம் முன் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் காலையில் சென்று, மாலையில் திரும்பி விடலாம். 

கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன. 

கல்வராயன் மலையில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் பழங்குடியினர் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கு வதற்காக கோடைக்கால விழாவை நடத்துகிறது. 
இந்த கோடை விழா ஜூன் மாதங்களில் நடைபெறுகிறது. மலை ஏறுபவர் களுக்காக ஆண்டு முழுவதும் நிகழ்ச்சி களுக்கு ஏற்பாடு செய்யப் படுகிறது. 

கல்வராயன் மலைகளுக்கு சென்று கோடை திருவிழா காலங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருவிழாவை கொண்டாடு கின்றனர்.