பெருங்குடல் புற்று நோய் நம் எலும்பு களுக்கும் பரவுகிறது என்பதை உங்களால் நம்ப முடியுமா? ஆனால் இது தான் உண்மை. 
குடல் புற்றுநோய்
மெட்டாஸ்டிக் குடல் புற்று நோய் கொண்டவர் களுக்கு இந்த அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இந்த பெருங்குடல் புற்று நோய் அப்படியே வளர்ந்து முதுகுத் தண்டுவடம், இடுப்பு பகுதி, கைகள் அல்லது கால்கள் போன்ற எலும்பு களுக்கும் பரவக் கூடியது.

கடந்த வருடங்களில் மேற்கொண்ட ஆய்வுப் படி நிறைய பெருங்குடல் புற்றுநோய் நோயாளிகள் இந்த பாதிப்பை அடைந் துள்ளனர். 

எனவே பெருங்குடல் புற்று நோய் க்கு உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம் என்று டாக்டர்கள் வலியுறுத்து கின்றனர்.

அறிகுறிகள்

எலும்புகளில் வலி

எலும்புகள் பலவீனமாகுதல் அல்லது உடைந்து போகுதல்

இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரித்தல்

முதுகுத் தண்டு வடத்தில் அழுத்தம். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே நீங்கள் மருத்துவரை நாடி விடுவது நல்லது.

மெட்டாஸ்டிக் புற்றுநோய்

இந்த புற்றுநோய் நிலையில் எலும்புகள் பலவீனமாகி தானாகவே உடைந்து போகும். எலும்புகளில் எந்த வித அடியும் ஏற்படாமலே இந்த நிலை ஏற்படும்.

இந்த உடைந்த எலும்புகளை வைத்துக் கொண்டு கால்களை நகர்த்துவது, நடப்பது, கைகளை தூக்குவது எல்லாம் சிரமமாக விடும்.

முதுகுத் தண்டுவடம் பாதிப்பு
முதுகுத் தண்டுவடம் பாதிப்பு
இந்த குடல் புற்றுநோய் தண்டு வடத்திற்கும் பரவி தண்டு வடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

பிரா பெண்கள் அறிய வேண்டிய உண்மைகள் !

இதனால் அங்கிருக்கும் எலும்புகள் பாதிப்படைந்து மலம் கழிக்கும் போது தீராத வலியை ஏற்படுத்து கிறது. இதை நீங்கள் உடனடியாக கவனிக்கா விட்டால் பக்கவாதம் வர வாய்ப்புள்ளது.

மருத்துவரை அணுக வேண்டிய நேரம்

தீராத முதுகுவலி, குடைச்சல் நடப்பதில் சிரமம் மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் கட்டுப் பாடின்றி செல்லுதல் எலும்புகளில் பரவல் இந்த குடல் புற்று நோய் எலும்புகளில் பரவும் போது எலும்புகளில் உள்ள கால்சியம் இரத்தத்தில் கலந்து விடுகிறது.

இதனால் சோர்வு மலச்சிக்கல் குமட்டல் தாகம் பசியின்மை அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு சிகச்சை செய்யா விட்டால் கோமாவிற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

குடல் புற்றுநோயை கண்டறிதல்

உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருந்தால் அதன் வீரியத்தை மருத்துவர் கண்டறிவார். பிறகு அது எலும்புகளில் பரவி யுள்ளதா? இரத்தத்தில் கால்சியம் கலந்துள்ளதா என்பதையும் கண்டறிவார். 
எலும்புகளில் கண்டறிதல் எக்ஸ்ரே எலும்புகளை ஸ்கேன் செய்தல் சிடி ஸ்கேன் பெட் ஸ்கேன் எம்ஆர்ஐ சிகிச்சைகள் எலும்புகளில் பரவி இருந்தால் சிகிச்சைகள் மூலம் உங்கள் வாழ்நாட்களை நீட்டு விக்கலாம்.

எலும்புகள் உடைவதற்கு முன்னே சிகிச்சைகள் பெறுவது நல்லது. எலும் புகளை பலப்படுத்த, வலியை குறைக்க மருந்துகள் பரிந்துரைக் கப்படும் கதிரியக்க தெரபி மூலம் எலும்புகளில் வலி மற்றும் எலும்புகள் உடைந்து போகும் வாய்ப்பை குறைக்கலாம். 
குடல் புற்றுநோயை கண்டறிதல்
எலும்புகள் பலவீனமான இடத்தில் மெட்டல் ராடு (கம்பிகள்) கொண்டு சப்போர்ட் கொடுப்பார்கள்.

பலவீனமான எலும்பு பகுதிகளில் செயற்கை சிமெண்ட் கொண்டு வலுவேற்றுதல். கீமோதெரபி, கதிரியக்க தெரபி, சிகிச்சைகள் மேற்கொள்ள வலியுறுத் தப்படும்.
கல்லீரல் பற்றி அறிந்து கொள்ளுங்கள் !
எலும்புகளை பராமரிப்பது எப்படி?

வாக்கர் அல்லது க்ரச்சஸ் போன்ற நடை வாகனத்தை பயன்படுத்த டாக்டர்கள் வலியுறுத்து கின்றனர்.

முதுகுத் தண்டு வடத்தை காக்க பெல்ட் அணிய வலியுறுத்தப் படுகிறது. மருத்துவர்கள் சில பிஸியோதெரபி போன்ற சிகிச்சை களையும் கொடுக்கின்றனர்.