பெற்றவர்களை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் - உருகும் இளைஞர் !

0
என் அப்பாவின் உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மூலமாவது தகவல் கிடைக்க லாம். உறவினர் களையும் கண்டுபிடிக்க முடிய வில்லை. ஆனால், என்னைப் பெற்றவர்களின் குடும்பத்தில் யாரை யாவது ஒருவரை நான் பார்க்க வேண்டும்.
திருமணத் துக்குப் பிறகு பெற்றவர் களை அரவணைக்க முடியாமல் அநாதை யாக்கும் பிள்ளைகள் பெருகி விட்ட இந்தக் காலத்தில், 

ஒரு முறையாவது என்னைப் பெற்றெடுத் தவர்களின் முகத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற `பாச தாகத்தில்’ கோவை வீதிகளில் அலைந்து கொண்டிருக் கிறார் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கேஸ்பர் ஆண்டர்சன். 

டென்மார்க்கு க்கும் கோவைக்கும் என்ன சம்பந்தம்..? கேஸ்பர் ஆண்டர்சனின் பெற்றோர்கள் எங்கே போனார்கள் என்பதெல் லாம் ஒரு நிஜ சினிமாவைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கெல்ட் - பெர்த் ஆண்டர்சன் தம்பதியின் மகன், கேஸ்பர் ஆண்டர்சன். கெல்ட்’-ம், பெர்த்’ -ம் சிறுவயதி லிருந்தே கேஸ்பரின் மீது அன்பைக் கொட்டி வளர்த்தார்கள். 


அவர்கள் இருவருக்கும் கேஸ்பர் என்றால் உயிர். அவர்கள், அவர் விரும்பி யதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள். 

நன்கு படிக்க வைத்தார்கள். ஆனால், பள்ளியில் சிலர் அவனை அந்நியமாகப் பார்த்தார்கள். கேஸ்பரும் தன்னை அந்நியமாக உணர்ந்த தால் மனமுடைந்து போனார். 

ஆனால், வீட்டில் கெல்ட்’டும் -பெர்த்தும் பொழியும் நிகரற்ற அன்பு அவரை ஆசுவாசப் படுத்தியது. அந்த அன்பின் அரவணைப்பில் தன் மீதான புறக்கணிப்பு களைக் கடந்து வளர்ந்த கேஸ்பர், பின்னாள்களில் கிராபிக்ஸ் டிசைனர் ஆனார். 

அதில் நல்ல வருமானம். லைஃப் செட்டில்டு! ஆனால், நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற கேள்வி கேஸ்பரை விடாமல் வதைத்துக்கொண்டே இருந்தது. ஆரம்ப காலத்தி லிருந்தே அவருக்குள் எழுந்த அந்தக் கேள்வி நாளடைவில் விஸ்வரூபம் எடுத்தது. 

இது தொடர்பாகக் கேட்கும் போதெல்லாம் ஏதாவது சொல்லி சமாளித்து வந்த கில்ட்’டாலும், பெர்த்’தாலும் இந்த முறை கேஸ்பரைச் சமாதானப் படுத்த முடிய வில்லை. உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயம்... என்ன நடந்தது?

தன் பெற்றோரைத் தேடிக் கண்டு பிடிக்கும் முனைப்போடு கோவைக்கு வந்திருக்கும் கேஸ்பர் ஆண்டர்சனிடம் பேசினோம், ``டென்மார்க்கில் உள்ளவர்கள் எல்லாம் வெள்ளைக் காரர்கள். என் பெற்றோரும்(கில்ட்-பெர்த்) வெள்ளை யாகத்தான் இருந்தார்கள். 

நான் உருவத்தில் கறுப்பாக இருந்ததால், எனக்கே என்னை அந்நியமாகத் தோன்றியது. ஆரம்பத்தில் அது பெரிதாக தெரிய வில்லை என்றாலும் விவரம் தெரிந்த பிறகு, அது உறுத்த ஆரம்பித்தது. 

என்னுடைய நெருங்கிய நண்பர்கள் நிறத்தால் என்னை ஒதுக்க வில்லை என்றாலும், பள்ளியில் உள்ள மற்ற மாணவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். இது பற்றி நான் எப்போது கேட்டாலும் என் அம்மாவும், அப்பாவும் ஏதாவது சொல்லிச் சமாளித்து விடுவார்கள். நானும் அதை மறந்து போவேன்.

டென்மார்க்கில் என் அப்பா மெக்கானிக் காக வேலை பார்த்தார். அம்மா, நான், தங்கை.. என வாழ்க்கை அழகாகச் சென்றது. தங்கைக்குத் திருமணம் ஆனது. அம்மா புற்றுநோயால் இறந்து போனார். அப்பா ரிட்டையர்டு ஆகி வீட்டில் இருந்தார். 

என் மனதில் நீண்ட வருடங்களாக அழுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை மீண்டும் அப்பாவிடம் கேட்டேன். `அன்பு மகனே நீ, நான் பெற்றெடுத்த பிள்ளை இல்லை. தத்தெடுத்த பிள்ளை. உன் பெற்றோர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். 

குழந்தை இல்லாததால் உன்னையும், உன் தங்கையையும் தத்தெடுத்து வளர்த்தோம் என்று நெக்குருகினார். கேட்டதும் என் கண்களில் நீர் திரண்டோடியது. அப்பாவுக்குக் கண்கள் கலங்கின. எங்கள் இருவரிடமும் வார்த்தைகள் இல்லை. 

டென்மார்க்கில் உள்ள ஒரு ஹோமில், என்னைத் தத்தெடுத் ததாகவும், இந்தியாவில் உள்ள ஒரு சைல்டு ஹோமி லிருந்து நான் டென்மார்க் ஹோமுக்குக் கொண்டு வரப்பட்ட தாகவும் அப்பா சொன்னார். 

நான் அப்பாவை இறுக்கி அணைத்துக் கொண்டேன்". கேஸ்பர் ஆண்டர்சனின் குரலில் ஈரம் சுரக்கிறது.


`அது வரை இருந்த வாழ்க்கையின் மீதான பார்வை மாறி அதிசயித்தேன். எங்கோ யாருக்கோ பிறந்து.. எங்கேயோ வந்து வாழ்ந்து கொண்டி ருக்கிறேனே!? உண்மையில், அது அதிசயமா கத் தான் தோன்றியது. 

என்னைப் பெற்றவர்கள் என்ன ஆனார்கள்? என்னை ஏன் ஹோமில் சேர்த்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பும் எனக்குள் ஏற்பட்டது. என் அப்பாவிடம் தயங்கியபடி அதைச் சொன்னேன். 

`தாராளமாகப் போய் பார்த்து விட்டு வா’ என்று சொல்லி அவர் என்னைத் தத்தெடுத் ததற்கான டாக்குமென்ட் களைக் கொடுத்தார், அவர். அந்த டாக்குமென்ட் களோடு, டென்மார்க்கில் நான் தத்தெடு க்கப்பட்ட ஹோமுக்குச் சென்று விசாரித்தேன். 

தமிழ் நாட்டில் உள்ள கோயம் புத்தூரில், `ப்ளூ மவுண்டன்” என்கிற குழந்தைகள் இல்லத்தி லிருந்து நான் டென்மார்க் குழந்தைகள் இல்லத்துக்கு 30 மாதக் குழந்தை யாக இருக்கும் போது வந்ததும், அப்போது, என்னைப் பெற்றவர்கள் வைத்த பெயர் ராஜ்குமார் என்பதும் தெரிய வந்தது. 

2015 லேயே ஒரு முறை தமிழகத்துக்கு வந்து யார் யார் மூலமாகவோ தேடினேன். ஆனால், என்னால் சரியான இடத்தைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. திரும்பிப் போய் விட்டேன்.

இந்த முறை பல்வேறு அமைப்புகளின் உதவியோடு இங்கே வந்தேன். `ப்ளூ மவுண்டன்’ குழந்தைகள் இல்லம் இப்போது மூடப்பட்டு விட்டது. 
அந்த இல்லத்தை நடத்திவந்த, மேரி கேத்தரின் என்பவர் கோத்தகிரி யில் இருப்பதாக எனக்கு உதவிய அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கண்டு பிடித்துச் சொன்னார்கள். மேரி அம்மாவை நேரில் சென்று பார்த்தோம். இதேபோல, நிறைய பேர் வந்து கேட்கிறார்கள். 

`நாங்கள் அந்த இல்லத்தை மூடி 30 ஆண்டு களுக்கு மேல் ஆகிறது, எதுவும் நினைவில் இல்லை' என்பதைத் தவிர, அவரிடம் பெரிதாக எந்தத் தகவலும் கிடைக்க வில்லை. 

பிறகு, நான் தத்துக் கொடுக்கப் பட்ட கோர்ட் டாக்குமென்ட்கள் மூலம் என்னைப் பெற்றெடுத்த அப்பாவின் பெயர் அய்யாவு என்பதும், அவர் கோவை தொண்டா முத்தூரை அடுத்த லிங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. 

என்னைப் பெற்றவர் களைப் பார்க்கப் போகிறேன் என்கிற தீராத ஆர்வத்தோடு லிங்கனூரு க்குச் சென்ற எனக்குக் கிடைத்த தகவல்கள் தீராத வலியைக் கொடுத்து விட்டது" என்று நிறுத்தி கேஸ்பர் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு தொடர்ந்தார்.

`நான் பிறந்த பிறகு, எனது அப்பா பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு விட்டாராம். அதனால் என் அம்மா எங்களை விட்டு எங்கோ போய் விட்டாராம். வயதான பாட்டியாலும், அப்பாவாலும் என்னை வளர்க்க முடியாமல் ஆசிரமத்தில் சேர்த்துள் ளார்கள். 

என்னை ஆசிரமத்தில் சேர்த்த பிறகு, சில காலம் அந்தப் பகுதியில் வாழ்ந்த என் அப்பாவும், பாட்டியும் அங்கிருந்து எங்கேயோ போய் விட்டார்களாம். எங்கே போனார்கள் என்ன ஆனார்கள் என்று தெரிய வில்லை என அந்தப் பகுதியில் உள்ள மக்கள் சொன்னார்கள். 


நான் அதிர்ந்து விட்டேன். இப்போது என் அப்பா இருக்கிறாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருவேளை அவர் எங்கேயாவது இருந்து அவர் நோயால் கஷ்டப் பட்டுக் கொண்டிருக் கலாம் என்று என் உள் நெஞ்சு துடிக்கிறது. 

அப்படி அவர் இருந்தால் அவருக்கு நான் உதவ வேண்டும் என்று என் மனசு சொல்கிறது. ஆனால், அவரை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரிய வில்லை. என் அப்பாவின் உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மூலமாவது தகவல் கிடைக்கலாம். 

உறவினர் களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், என்னைப் பெற்றவர்களின் குடும்பத்தில் யாரையாவது ஒருவரை நான் பார்க்க வேண்டும்” என்று சொல்லும் கேஸ்பர் ஆண்டர்சனு க்கு இப்போது வயது 40.

30 மாதக் குழந்தையாக தத்துக் கொடுக்கப்பட்ட ராஜ்குமார்.. கேஸ்பர் ஆண்டர்சனாக 40 வருடங்கள் கழித்து வருவார் என்று அவர் தந்தை நினைத்தி ருப்பாரா என்ன? 

மேலும்
இன்னும் சில நாள்களில் கோவையில் தேடிவிட்டு கேஸ்பர் டென்மார்க் திரும்பி விடக்கூடும். ஆனால், சாகும் வரையில் அவர் மனம் தேடிக் கொண்டே இருக்கும், பக்கவாதம் கொண்ட அவருடைய அப்பாவுடைய முகத்தை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)