வாயில் வரும் வெண் புண்ணை சரிசெய்ய? இதை ட்ரை பண்ணுங்க ! - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

வாயில் வரும் வெண் புண்ணை சரிசெய்ய? இதை ட்ரை பண்ணுங்க !

வாய் வெண்புண் என்பது வெள்ளை படலம் போல் திட்டுக்களானது வாயின் உட்பகுதியில் ஏற்படுவதே ஆகும். இத்தகைய வெண்புண் கேண்டிடா ஆல்பிக்கென்ஸ் என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது. 
வெள்ளை படலம்
இதை மேலும் விட்டால் சிவப்பு நிறத்தில் புண்கள் வர வாய்ப்புகள் அதிகம். மேலும் இவை நாக்கு மற்றும் தொண்டைகளில் ஏற்படும் புண்களாகும். 

இதை நாம் பெருமளவில் குழந்தைகளிடம் காண முடியும் என்றாலும், பெரியவர்களுக்கும் வர வாய்ப்புகள் உள்ள பிரச்சனை தான். 
பெரியவர்கள் அதிக அளவு மருந்து உட்கொண்டால் பாக்டீரியாவை கொன்று இந்த வெண்படலம் உருவாகிறது. இது மிக அதிகமாக இருந்தால் நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது. 

அடிக்கடி இந்த பிரச்சனை வந்தாலும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. அதே சமயத்தில் நாம் வீட்டிலிருந்த படி இதை குறைக்கும் முயற்சிகளை எடுக்க முடியும். இதற்கு ஒரு சில வழிகள் இதோ:

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, வாயை கொப்பளித்து வந்தால், வாயில் உள்ள பூஞ்சையின் வளர்ப்பை கட்டுப்படுத்த முடியும். 

அதிலும் இதை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை செய்வது நல்லது.

போரிக் அமிலம்

போரிக் அமிலம் மூலம் இந்த வாய் வெண் புண்ணை நீக்க முடியும். இந்த அமிலத்தை பெரியவர் களுக்கு பயன்படுத்த லாம். 

குழந்தை களுக்கு பயன்படுத்தக் கூடாது. ஒரு கப் தண்ணீரில் கால் டீஸ்பூன் போரிக் அமிலம் கலந்து மூன்று அல்லது நான்கு முறையாவது வாயை கழுவினால் இதை நீக்க முடியும். 
போரிக் அமிலம்
இதை பயன்படுத்தும் போது கவனத்துடன் செய்ய வேண்டும். இந்த கலவையை விழுங்கி விட்டால், அது வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை கொண்டு வரும்.
பூண்டு
பூண்டு
பூஞ்சை மற்றும் பாக்டீரியா ஆகியவற்றை அழிக்கக் கூடிய சக்தி பூண்டுக்கு உள்ளது. 

இரண்டு பூண்டு பற்களை எடுத்து நன்கு மசித்து பின்னர் அதை விழுங்கியோ அல்லது பூஞ்சை உள்ள இடங்களில் சிறிது நேரம் ஒதுக்கி வைத்து பின்னர் விழுங்குவதோ நல்லது. இவை பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும்.
தயிர்

உயிருள்ள அசிடோபில்லஸ் உள்ள தயிர் கடைகளில் கிடைக்கும். அதை இரண்டு ஸ்பூன் எடுத்து உண்பது வீக்கத்தையும் புண்களையும் குறைக்கும். இதை சுட வைக்காத பால் மூலம் செய்வார்கள். 
தயிர்
சுட வைத்த பாலில் அதிக அளவு லாக்டோபேசில்லஸ் இல்லாததால் பூஞ்சையை கட்டுப் படுத்த முடிவதில்லை. 

காய்ச்சாத பாலால் செய்யப்பட்ட தயிரை நீங்கள் குடிக்க விரும்பாவிட்டால், அசிடோபில்லஸ் மாத்திரை களை பயன்படுத்த லாம். 

இவை பாக்டீரியாவை கட்டுப்படுத்த உதவும். இரண்டு அசிடோபில்லஸ் மாத்திரையை எடுத்து அதை உடைத்து ஆரெஞ்சு சாற்றுடன் கலந்து குடிக்கலாம்.
லாவெண்டர் எண்ணெய், இலவங்க எண்ணெய், டீ மர எண்ணெய்களில் தொற்றுகளை தடுக்கும் சக்தி உள்ளது. 
எண்ணெய்
இவை வாய் வெண்புண்களை குணமாக்க சிறந்த கருவிகளாக உள்ளன. இவைகளை எந்த ஒரு மளிகை கடைகளிலும் வாங்க முடியும். 

இந்த எண்ணெயை நாம் பயன்படுத்தும் பற்பசையில் இரண்டு அல்லது மூன்று சொட்டு விட்டு பற்களை துலக்கினால் பற்பசையும் எண்ணெய்யும் கலந்து வாய் முழுவதும் பரவி பின்னர் கழுவும் போது நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வெது வெதுப்பான தண்ணீரில் மேற்கூறிய எண்ணெய் வகைகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து 

அந்த தண்ணீரில் சில சொட்டுக்களை விட்டு வாயை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொப்பளித் தாலும், இந்த படலத்தை நீக்க முடியும்.