பொங்கல் பரிசுககு தடை விதிக்கக்கோரி பொதுநல மனு தாக்கல் !

0
தமிழக அரசுக்கு ஏற்கெனவே மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை இருக்கும் நிலையில், ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கடன் சுமையை அதிகரி க்கும் என்று கூறி அந்தத் திட்டத்து க்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
2.2 கோடி லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுடன், இந்த ஆண்டில் ரூ.1.98 கோடி குடும்ப அட்டை தாரர்களு க்கு, தலா 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித் துள்ளது. 


இதனால், வழக்கமாக தமிழக அரசுக்கு அளிக்கும் பொங்கல் பரிசுக்குச் செலவாகும் 258 கோடி ரூபாயுடன், கூடுதலாக 2,250 கோடி ரூபாய் கூடுதல் செலவாக வுள்ளது.
தற்போது ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப் பட்டு வருகிறது.கடுமை யான நிதிச்சுமை இருக்கும் நேரத்தில் பொங்கல் பரிசு திட்டம் வழங்க கூடாது என்று கோவையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான டேனியல் ஏசுதாஸ் என்பவர், 

இதற்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று 7.1.2019 விசாரணைக்கு ஏற்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)