மலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்படும் சிக்கலும் பக்தியும் !

0
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க லாம் என உச்சநீதி மன்றம் அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.  இந்த உத்தரவுக்கு ஆதரவாகவும் சிலர் குரல் எழுப்புகின்றனர். 
பாலின சமத்துவத் துக்கு இந்தத் தீர்ப்பு ஒரு உதாரணம் என பெண்கள் அமைப்புகள் கருத்துகளை தெரிவித்தனர். 

ஆனால், சபரிமலை கோவிலுக்கு என்று ஓர் ஐதீகம் இருக்கிறது அது காக்கப்பட வேண்டும் பந்தள அரசு குடும்பத்தினரும், தந்திரிகளும் கருத்து தெரிவித்தனர். 

இதனை யடுத்து தீர்ப்பு வந்ததற்கு பின்பு ஐப்பசி மாதப் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்  பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கொடுக்கப் பட்டதால் பெண்கள் சபரி மலைக்கு செல்ல திட்ட மிட்டனர். ஆனால், அவர்களை பக்தர்கள் வழியிலேயே, அதாவது பம்பாவிலேயே நிறுத்தப் பட்டனர். 

இதையும் மீறி ரெஹானா பாத்திமா என்ற பெண்ணிய வாதியும், ஒரு பெண் பத்திரிக்கை யாளரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். 
ரெஹானா பாத்திமாவு க்கு போலீஸ் உடை அணிவித்து ஐ.ஜி. தலைமை யிலான பாதுகாப்போடு பம்பாவில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டனர். 

பலத்த பாதுகாப்போடு சென்ற இரண்டு பெண்களையும் சபரிமலை சந்நிதான த்தின், கீழ்பகுதியில் உள்ள நடைப் பகுதியில் திரளாக திரண்ட பக்தர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தினர். 

இதனை யடுத்து போலீஸார் பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பக்தர்கள் சரண கோஷம் எழுப்பிய வாறு பெண்களை அனுமதிக்க முடியாது என போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள அரசு, இந்த இரு பெண்களை யும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தர விட்டது. 

இதனை யடுத்து ரெஹானா பாத்திமாவும், உடன் வந்த பெண் பத்திரிக்கை யாளரையும் திருப்பி அனுப்பினர். 

இதன் பின்தான் சபரிமலை மாலை அணிந்து பல ஆபாசமாக போட்டோக் களை ரெஹானா பாத்திமா தன் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தார். 

மேலும், மதவாதத்தை தூண்டும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளி யிட்டிருந்தார். 

இதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், ரெஹானா பாத்திமாவை கைது செய்தனர். பின்பு, இப்போது ஜாமீனில் வெளியே வந்தார். 
அதே போல ஸ்வீட்டி மேரி என்ற பெண்ணும் இரண்டு முறை சபரி மலைக்கு செல்ல முயன்று தோல்வி யடைந்தார். பின்பு, திருப்தி தேசாய் மஹராஷ்ட்டிரா வில் இருந்து வந்து செல்ல முயன்று தோல்வி யடைந்தார்.

இப்போது சென்னையைச் சேர்ந்த மனிதி என்ற அமைப்பின் மூலம் 11 பெண்கள் நேற்று பம்பையில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டனர். 

ஆனால் அவர்களை அனுமதிக்க மறுத்து பம்பையில் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். 

பின்பு காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்து அவர்களை பாதுகாப்புடன் சபரிமலை நோக்கி அழைத்துச் சென்றனர். 

ஆனால் பாதி வழியிலேயே பெண்கள் மீது தாக்குதல் நடத்த சில போராட்டக் காரர்கள் முற்பட்டதால். பெண்கள் சிதறி ஓடினர். மேலும், சபரிமலை செல்லும் முடிவை பெண்கள் குழு கை விட்டனர். 

போலீஸாரும் பெண்கள் நுழைவுக்கு எதிராக போராடு பவர்கள் மீது தடியடி நடத்த முடியாது எனவே உங்கள் பாதுகாப்பை கருதி நீங்கள் திரும்பி செல்லுங்கள் என தெரிவித்து விட்டனர். 

ஆனால் மீண்டும் வருவோம் என சூளுரைத்தனர் பெண்கள் அமைப்பினர்.

போராடும் இடமா சபரிமலை ?

சபரிமலை தீர்ப்புக்கு கேரளாவிலும் சரி தமிழக்ததிலும் சரி பெண்களே எதிர்ப்பு தெரிவிக் கின்றனர். 
சபரி மலைக்கு செல்ல முயலும் பெண்கள் அனைவரும் பக்தியுடன் செல்கின்றனரா? விரத முறைகளை கடைப் பிடிப்வர்களா? ஐயப்பன் மீது ஈர்ப்பும் நம்பிக்கை கொண்டவர்களா? 

என்ற கேள்விகளை முன் வைத்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது 

அதனால் செல்கிறோம் என்ற வீம்புக்கும், விளம்பர த்துக்குமே செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப் படுகிறது. 
இதுவரை சபரி மலைக்கு செல்ல முயன்ற பெண்களின் விவரங் களையும் சமூக வலைத்தள பக்கத்தை பார்த்த பின்பு தான் அவர்களின் நோக்கம் குறித்த விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. 

ஐயப்பன் கோவிலின் 18ஆம் படி ஏறுவோம் என்றும் பெண்கள் அமைப்பினர் கூறுகின்றனர். 

விரதமிருந்து இருமுடி கட்டுபவர்கள் மட்டுமே 18 படி ஏற அனுமதி உண்டு என்று தெரிந்தும் செல்கின்றனர் என்றால் 

சபரிமலை விவகாரத்தை தங்களது விளம்பரத்துக்கு பயன்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது என்று இந்து அமைப்புகள் கொதிக்கின்றனர்.

இது குறித்து மனிதி அமைப்பைச் சேர்ந்த திலகவதி கூறும் போது பம்பாவில் குளித்து விட்டு அர்ச்சகரிடம் இருமுடி கட்டுமாறு கேட்டோம், ஆனால் அவர் மறுத்து விட்டார். 

இதனை யடுத்து அவரிடம் வாதிட்டோம். பின்பு நாங்களே இருமுடி கட்டிக் கொண்டு சென்றோம். எங்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

போலீஸ் பாதுகாப்புடன் மலை ஏறினோம், ஆனால் போராட்டம் தீவிரமடைந் ததால் போலீஸ் எங்களை திரும்ப போகச் சொன்னார்கள். 
நாங்கள் கிட்டத்தட்ட 12 மணி நேரம் உணவு கூட எடுத்துக் கொள்ளாமல் அமர்ந்தி ருந்தோம். பின்பு மதுரைக்கு திரும்பி விட்டோம் என கூறினார்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு என்றாலும் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு அம் மாநிலத்தின் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சுரேந்திரன் வெளியிட்ட ஓர் அறிக்கை மிக முக்கியமானதாக பார்க்கப் படுகிறது. 

அது அரசின் நோக்கம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தவிர, சமூக செயற் பாட்டாளர்க ளுக்கு அல்ல.

எனவே, போராட்டக் காரர்களு க்கும், செயற் பாட்டாளர் களும் ஒரு வேண்டுகோள். சபரிமலை போராடு வதற்கான இடம் அல்ல. 

சபரி மலைக்கு வந்து உங்கள் போராட்ட எண்ணங் களையும், வலிமையையும் வெளிப்படுத்த வேண்டாம். 

சபரிமலை விஷயம் லட்சக்கணக் கான மக்களின் நம்பிக்கை சம்பந்தப் பட்டது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும் என தெரிவித் திருந்தார்.

சபரிமலை சன்னி தானம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தாலும், 

பக்தர்களுக்கு இதனால் சில சிக்கல்கள் இருந்தாலும் உண்மையான ஐயப்ப பக்தர்களை காக்க அம்மாநில அரசு இதுவரை தவற வில்லை. 
எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண்களால் தான் சபரிமலை போராட்டக் களமாக மாறி விட்டது என நடுநிலை யாளர்களின் கருத்தாக இருக்கிறது. 
ஐயப்பன் கோவிலுக்கு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி யளித்தது சரிதான் என்றாலும், கோயிலின் விதிகளை மீறவும், 

விரத முறைகளை கடைப் பிடிக்காமலும் செல்லலாம் என்று தனது தீர்ப்பில் கூற வில்லை என்பதை பெண்கள் அமைப்பு புரிந்துக் கொள்ள வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)