நுண்ணுயிர்க் கொல்லி மாத்திரைகளால் ஏற்படும் ஆபத்து என்ன?

0
நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை கொடுக்கும் போதே மருத்துவர்கள், நோய்க்கிருமி தொற்றில் இருந்து எப்படி தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் சேர்த்தே ஏற்படுத்த வேண்டும்.
நுண்ணுயிர்க் கொல்லி மாத்திரைகளால் ஏற்படும் ஆபத்து என்ன?

சளி, காய்ச்சல் என்று கூறி மருந்துக் கடைகளில் நாம் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். இதை ஒரு நாள் மட்டும் உட்கொள்ளலாமா என்று கேட்டால் கண்டிப்பாகக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். 


நோய்த் தொற்று கிருமியை எதிர்க்கக் கூடிய நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை ஒரு நாளைக்கு மட்டும் நாம் பயன்படுத்தும் போது நாளடைவில், அந்தக் கிருமி நுண்ணுயிர்க் கொல்லி மருந்தையே எதிர்க்கக் கூடிய திறனை பெற்று விடும்.
வயிற்றுப் போக்கிற்கு மருந்துக் கடைகளில் வாங்கும் மருந்தில் புளூரோ குயினலோன்ஸ் என்ற வேதிப் பொருள் இருக்கும். 

நோய்த் தொற்றை எதிர்க்கும் ஆற்றலை அந்த மருந்து இழந்து விட்டால், நம் உடல் கடுமையான சிக்கலைச் சந்திக்கும். நோய்த் தொற்றில் இருந்து உடல் சீரடையாது.

இன்றைக்கு எந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்து உலகில் கண்டு பிடிக்கப் பட்டாலும் அது முதலில் விற்பனைக்கு வருவது இந்தியாவில் தான். 
நுண்ணுயிர்க் கொல்லி மாத்திரைகளால் ஏற்படும் ஆபத்து என்ன?

இதற்கு முக்கியக் காரணம் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை தவறுத லாகவும், தேவை யில்லாமலும் பயன் படுத்துவது தான். 

இதனால் புதிதாக வரும் நுண்ணு யிர்கள் சில நாட்களிலேயே நுண்ணுயிர்க் கொல்லியை எதிர்க்கக் கூடிய ஆற்றலை பெற்று விடுகின்றன. 

நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை தவறுதலாக பயன் படுத்துவதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக உலகச் சுகாதார நிறுவனம் உலக நுண்ணுயிர்க் கொல்லி விழிப்புணர்வு வாரத்தை நவம்பர் மாதம் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கடைபிடிக்கிறது.

கல்லீரல் பிரச்சனையும் தீர்வும் !

நுண்ணுயிர்க் கொல்லி மருந்து களை கொடுக்கும் போதே மருத்துவர்கள், நோய்க் கிருமி தொற்றில் இருந்து எப்படி தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்பு ணர்வையும் சேர்த்தே ஏற்படுத்த வேண்டும்.

தேவையான போது நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை முறையான, தரமான, சரியான அளவில் வழங்குவது மட்டு மல்லாமல், 

அதை எப்படி முறையாக உட்கொள்ள வேண்டும் என்றும், அதன் பக்க விளைவுகள், நன்மைகள் பற்றியும் நோயாளிகளுக்கு விளக்க வேண்டும். 
நுண்ணுயிர்க் கொல்லி மாத்திரைகளால் ஏற்படும் ஆபத்து என்ன?

மருந்துக் கடை நடத்துபவர்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை நோயாளிகளுக்கு ஒரு போதும் கொடுக்கக் கூடாது.

பெண்களை பாதிக்கும் பித்தப்பை கற்கள் !

சாதாரண காய்ச்சல், சளி என்று வரும் நோயாளி களுக்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் தேவை யில்லை என்பதை எடுத்துக் கூற வேண்டும். நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை எத்தனை வேளை உட்கொள்ள வேண்டும்.

எத்தனை நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும் எனத் தெளிவாக விளக்கி, எழுதிக் கொடுக்க வேண்டும் என்பன போன்ற விதி முறைகளை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)