திருவண்ணா மலையில் இருந்து பெங்களூரு க்கு செல்லும் சிலைகள் !

0
380 மெட்ரிக் டன் எடை, 120 அடி நீலம், 33 அடி அகலம், 15 அடி (உயரம்) தடிமன் கொண்ட ஒரு கல்லை திருவண்ணா மலையில் இருந்து பெங்களூரு க்கு அனுப்பிக் கொண்டிருக் கிறார்கள். எல்லாம் kothandaramaswamy கோவிலுக்கு.
சிலை விவரம்

கோதண்ட ராமசாமி கோவில் ட்ரஸ்டின் உறுப்பினரான சதானந்தா வுக்கு 108 அடி உயரத்தில் 22 கரங்கள், 11 முகங்கள், ஏழு தலை கொண்ட ஆதி சேச நாகத்துடன் மகா விஷ்ணுவின் 

விஸ்வரூப தரிசன காட்சியை ஒரு சிலையாக நிறுவ வேண்டும் என்பதை ஆசை. அதன் பணிகளைத் தான் இப்போது படித்துக் கொண்டிருக் கிறோம்.


கற்கள்

சதானந்தாவின் கனவுச் சிலைக்கு உயிர் ஊட்ட சாட்டிலைட் உதவிகளுடன் தேடியதில் தமிழகத்தில் திருவண்ணா மலிக்கு அருகில் இருக்கும் கொரகோட்டை கிராமத்தில் ஒரு கல் தென்பட்டி ருக்கிறது. 
அதைத் தான் இப்போது பெங்களூரு க்கு கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டிருக் கிறார்கள்.

வேலை தொடக்கம்

கடந்த அக்டோபர் 2014-ல் இருந்து மகா விஷ்ணுவின் விஸ்வரூப தரிசனத் துக்கான சிலைகளை செய்ய தகுதியான கல்லை தேடித் தேடிப் பார்த்து தேர்வு செய்திருக்கி றார்களாம். 

அதே போல் இந்த கல்லை வெட்டி எடுக்க இந்தியாவின் பல்வேறு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கி றார்களாம்.

சிறு வேலை

முதல் நிலையாக , ஒரு முகம், இரண்டு கைகள் மற்றும் இரண்டு சக்கரங் களை மட்டுமே கல்லில் வடித்திருக்கி றார்களாம். இந்த கல்லை பெங்களூரூ வில் கோவிலு க்குக் கொண்டு சென்ற பின் 
இரண்டு ஸ்தபதிகள் வேலை பார்த்து முழு விஸ்வரூப தரிசன த்தையும் வடித்து முழுமையாக வேலையை முடிக்க சுமார் 2 - 3 வருடங்கள் ஆகும் என்றும் கோதண்ட ராமசாமி ட்ரஸ்டினர் சொல்லி இருக்கிறார்கள்.

சக்தி வந்துவிட்டது

கல்லில் தெய்வ உருவங்களை வடித்துவிட்டதால் அதில் இறைவனின் அருள் பரிபூரண மாக வந்து விட்டது. எனவே தான் கற்களை ஒழுங்காக கொண்டு செல்ல முடிய வில்லை என சிலர் தங்கள் நம்பிக்கை களைச் சொல்லி இருக்கி றார்கள். 

அதையும் சரி செய்ய கோதண்ட ராமசாமி ட்ரஸ்டினர் சில விசேஷ பூஜை களையும் செய்து மீண்டும் போக்கு வரத்துப் பணிகளை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். 
செல்லும் வழி எல்லாம் நாராயண ஜெபம் செய்து கொண்டே வேறு செல்ல இருக்கி றார்களாம்.

சிரமங்கள்


170 சக்கரங்கள் கொண்ட ராட்சச டிரக்குகளாலேயே இந்த கற்களைத் தாங்கி வர முடிய வில்லை. காரணம் அதிக எடை. கிராமத்தில் இருந்து தார் சாலைகளை வந்தடைடை சுமார் 980 மீட்டர்கள் இருக்கிறதாம். 
இந்த 980 மீட்டரைக் கடக்கவே சுமார் 10 நாட்கள் ஆகி விட்டதாம். இதற்கு நடுவில் மண்ணில் ட்ரக்குகளின் சக்கரங்கள் புதைவது, டயர்கள் வெடிப்பது என பிரச்னை மேல் பிரச்னை வருகிறதாம்.

போக்குவரத்து நிறுவனம்

மும்பையைச் சேர்ந்த ரேஷம் சிங் குழுமம் தான் இந்த பிரமாண்ட சிலைக் கற்களை பெங்களூரு க்கு கொண்டு செல்ல இருக்கிறது. 

"சமீபத்தில் பெய்திரு க்கும் மழையால் தான் இவ்வளவு பிரச்னை களுக்கும், கால தாமதத்து க்கும் காரணம். 
எப்படி இருந்தாலும், தார் சாலையை அடைந்து விட்டால் தானாக போக்கு வரத்து சரியாகி விடும்" என இந்த சிலை போக்குவரத்து திட்டத்தின் மேலாளர் ராஜன் பாபு சொல்லி இருக்கிறார். 

இந்த சிலைக்கு சக்தி இருக்கிறதா எனத் எங்களுக்குத் தெரியாது, ஆனால் இருந்தால் ஒரு விருந்தினரை பத்திரமாக அழைத்துச் செல்வது போல அழைத்துச் செல்வோம் என்று சொல்லி இருக்கிறார்.

வழக்கு

கொரகோட்டை கிராமத்தில் இருந்து இந்த கற்களை எடுத்துச் செல்வதால் பொது மக்களு க்கும், பொதுச் சொத்துக் களுக்கும் பாதிப்பு ஏற்படும் என செய்யார் பகுதியைச் சேர்ந்த முனி கிருஷ்ணன் வழக்கு தொடுத்தி ருக்கிறார். 
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்டிருக்கும் அந்த பொதுநல வழக்கு இப்போது என்ன நிலையில் இருக்கிறது எனவும் தெரிய வில்லை.

முனி கிருஷ்ணன் வாதம்

கோதண்ட ராமசாமி கோவில் ட்ரஸ்டின் நிர்வாகிகள் எடுத்துச் செல்லும் பிரமாண்ட கற்கள் தமிழக அரசுக்கு சொந்தமானது. 


அதோடு இத்தகைய ராட்சச பாறையை, சாலை போக்கு வரத்தில் கொண்டு செல்லும் போது பொதுச் சொத்துக்க ளான சாலைகள், மக்களின் வீடுகள் சேதமாகும் என முனி கிருஷ்ணன் தரப்பு வாதிடுகி றார்கள்.

ஒப்புக் கொண்ட ட்ரஸ்ட்

முனி கிருஷ்ணன் வழக்கு தொடுக்கும் நேரத்திலேயே கோதண்ட ராமசாமி கோவில் ட்ரஸ்டே முன் வந்து சிலரின் வீடுகள் முழுமை யாகவோ அல்லது பகுதி யாகவோ இடிக்க வேண்டி இருக்கும். 
சிலை கற்களின் போக்கு வரத்துக்காக இப்படி இடிக்கப் படும் வீடுகள் கோதண்ட ராமசாமி டிரஸ்டின் செலவிலேயே கட்டிக் கொடுக் கப்படும் என்றனர்.

ஸ்தபதி

பிரச்னைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, சதானந்தா வின் கனவுச் சிலையை வடிக்க திருப்பதி தேவஸ் தானத்தின் ஆஸ்தான ஸ்தபதி யான ராஜேந்திர ஆச்சார் யாவுக்கு அழைப்பு விடுத்திருக்கி றார்களாம்.

கொரபேட்டை கிரமத்தினர்

"எங்கள் மண்ணில் இருந்து கோவிலுக்காக எடுத்துச் செல்லப்படும் கல் இங்கேயே தங்கி விடும் என்றே தோன்றுகிறது. அப்படி ஒருவேளை இங்கேயே தங்கி விட்டால் 

நாங்கள் இந்த மாகா விஷ்ணுவு க்கு கோவில் கட்டி கோலாகல மாக பார்த்துக் கொள்கிறோம்" என்கிறார் ஒரு கொரகோட்டை கிராமவாசி.

புரான உதாரணங்கள்

அதற்கு புராண உதாரணம் ஸ்ரீரங்கம் என்கிறார்கள். உலகின் மூன்றே மூன்று ரங்கர்கள் தான் பிரசித்தம். 1. ஆதி ரங்கன். 2. மத்திய ரங்கன். 3. அந்த்ய ரங்கன். 

இதில் இப்போது ஆதி ரங்கன் மற்றும் மத்திய ரங்கன் ஆகிய இருவரும் கர்நாடகத் தில் ஸ்ரீரங்கப் பட்டினம் மற்றும் சிவான சமுத்திரம் ஆகிய பகுதிகளில் இருக்கி றார்கள். 


அந்த்ய ரங்கன் ஸ்ரீரங்கத்தில் தமிழகத்தில் இருக்கிறார். என ஒரு கதை பேசுகிறார்கள்.

சைவம் தான்

ரங்கன் பிரச்னை போக, கர்நாடக ஒரு வீர சைவ இனத்துக்கான நாடு. எனவே தான் பெருமாள் கர்நாடகத்துக்கு செல்ல மறுக்கிறார் எனவும் ஒரு கிளைக் கதையை பரப்பி வருகிறார்கள். 
எது எப்படியோ, எத்தனை கதைகளோ நம்பிக்கை களோ ஒரு பக்கம் கிராம மக்களும், கோதண்ட ராமசாமி ட்ரஸ்டினரும் உருகிக் கொண்டிருக்க... 

இளைஞர்கள் அந்த பிரமாண்ட சிலை உடன் நின்று செல்பிக ளாக எடுத்துத் தள்ளுகி றார்களாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings