ஏன் சென்டினல்கள் வெளியாட்களைத் தாக்குகிறார்கள்?

0
சென்டினல்கள்... கடந்த ஒரு வாரமாக சர்வதேச அளவில் அதிகம் உச்சரிக்கப் படும் வார்த்தை. அதிக இணையத் தேடல்களுக்கு உள்ளான ஒரு வரலாறு. 
ஏன் சென்டினல்கள் வெளியாட்களைத் தாக்குகிறார்கள்?

தாங்களுண்டு, தங்கள் வாழ்க்கை உண்டு என்று வாழ்ந்து வந்த அந்த மக்கள், இன்று சர்வதேச சமூகத்தின் முன் குற்றவாளி களாக நிற்கிறார்கள். 

அவர்களின் உலகுக்குள் அந்நியர்கள் நுழைவதை அவர்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். அது மீண்டும் நிகழ ஆரம்பித் திருக்கிறது. 

அந்தமான் - நிகோபார் தீவுகளில், வெளியு லகுடன் எந்த வித தொடர்பும் இல்லாமல் பல்லாயிரம் ஆண்டு களாக வசித்து வரும் பழங்குடி மக்கள் தான் 'சென்டினல்'கள். 

கடந்த 2004-ம் ஆண்டு அந்தமான் நிகோபார் தீவுகள் சுனாமியால் பாதிக்கப் பட்ட போது, இந்த மக்கள் எப்படி இருக்கி றார்கள் என்று பார்ப்பதற் காக விமானத்தின் மூலம் அதிகாரி களை அனுப்பியது மத்திய அரசு. 

சென்ற விமானங்கள் போன வேகத்தில் திரும்பி வந்தன. சென்டினல் பழங்குடி மக்கள் விமானத்தின் மீது அம்புகளை வீசித் தாக்குதல் நடத்தியதே அதற்குக் காரணம். 

அதைத் தொடர்ந்து இந்த மக்களின் வாழ்வியலிலும் வாழ்விடங் களிலும் ஒரு போதும் தலையிடப் போவ தில்லை எனக் கடந்த 2005-ம் ஆண்டு அறிவித்தது மத்திய அரசு.

இந்தத் தீவுக்குள் யாரும் போகக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இந்தியக் கடற் படையால், இந்தத் தீவைச் சுற்றி யுள்ள மூன்று கடல் மைல்கள் பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப் பட்டது. 
சென்டினல் தீவு மட்டுமல்ல, அந்தமானில் உள்ள 29 தீவுகளையும் மற்றவர்கள் நுழையத் தடை செய்யப் பட்டப் பகுதியாக இந்திய அரசு அறிவித் திருந்தது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் அதற்கான தடை நீக்கப் பட்டது. இருந்த போதும் அந்தமான் நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே இந்தப் பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும்.

இந்த நிலையில் தான் கடந்த சில நாள்களுக்கு முன்பாக, எந்தவித முன் அனுமதியும் பெறாமல், சட்ட விரோத மாக அமெரிக்க மத போதகர் ஜான் ஆலன், இத்தீவுக்குள் செல்ல முயன்று, அந்த மக்களால் கொலை செய்யப் பட்டார். 

இதற்கு முன்பாக வும் இது போன்ற ஒரு சில சம்பவங்கள் நடந்தேறி யிருக்கின்றன.

சென்டினல்கள், வெளியுலக மனிதர்களைக் கண்டால் அவர்களைத் தாக்குவது ஏன்?

மானுடவியல் பேராசிரியரும் `தமிழர் மானுடவியல்’, `தமிழகப் பழங்குடிகள்' போன்ற நூல்களை எழுதிய வருமான பக்தவத்சல பாரதியிடம் கேட்டோம்.

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழுகின்ற பழங்குடி மக்களையும்,அந்தமான் நிகோபார் தீவுகளில் வாழுகின்ற பக்தவத்சல பாரதி சென்டினல்

மக்களையும் நாம் வேறு வேறாகத் தான் பார்க்க வேண்டும். சென்டினல் பழங்குடி மக்களுக்கு மிக நீண்ட பாரம்பர்யம் இருக்கிறது.

அவர்களின் பூர்வீகத்தின் மீது அவர்களுக்கு மிகப்பெரிய பற்றுதல் இருக்கிறது. ஆரம்பக் காலத்தில் இருந்தே வெளியாட் களை அவர்களின் நிலத்துக்குள் அனுமதிப்ப தில்லை.
ஏன் சென்டினல்கள் வெளியாட்களைத் தாக்குகிறார்கள்?
அவர்களின் தீவை யார் நெருங்கினா லும், ஆபத்து நெருங்கி விட்டதாகத் தான் உணர்வார்கள்.

வெளியில் இருந்து யார் அவர்களின் நிலத்துக்குள் சென்றாலும் அவர்களின் காட்டை அழிக்க வருவதாகத் தான் நினைத்துக் கொள்வார்கள்.

அவர்கள் அப்படி நினைப்ப தற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. காட்டு வளங்களை அபகரிப் பதற்காகச் சென்று, அதைத் தடுக்க முயன்ற பல பழங்குடிகள் ஆங்கிலேயர் காலத்தில் கொல்லப் பட்டிருக்கி றார்கள்.

அதன் காரணமாகப் பழங்குடி மக்கள் பலர் இறந்து போயிருக் கிறார்கள். வெளியில் இருந்து யார் வந்தாலும் அவர்களின் காட்டை அபகரித்து விடுவார்கள் என்கிற அச்சம் அவர்களு க்கு எப்போதும் இருக்கும்.

அதன் காரண மாகத்தான் அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள். தற்காப்புக் காக மட்டும் தான் அவர்கள் பிறரைத் தாக்குகி றார்கள்.

அவர்களு க்குத் தேவையான விஷயங்கள் அனைத்துமே காட்டிலேயே கிடைத்து விடுகின்றன. தன்னிறைவான ஒரு வாழ்க்கையைத் தான் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அதனால் மற்றவர்களின் எந்த உதவியும் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களை மேம் படுத்தும் எண்ணத்துடன் யாராவது தீவுக்குள் சென்றாலும் கூட,
அவர்களுக்கு எதிராக வருவதாகத் தான் நினைத்துக் கொள்வார்கள். அந்தமான் தீவில் வாழும் பல்வேறு பழங்குடி மக்கள் வெளி உலகத் துடன் நெருக்க மாக வந்து கொண்டிருக் கிறார்கள்.

சென்டினல்கள், ஜாரவா போன்ற பழங்குடி மக்கள் தான் இன்னும் தனித்து வத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என நாம் கேள்வி எழுப்புவது அடிப்படையில் தவறு.

மாறி விட்ட பழங்குடி களை வேண்டு மானால் அப்படிக் கேள்விக்குட் படுத்தி அதற்கான காரணங் களைக் கண்டறியலாம்’’ என்கிறார் பக்தவத்சல பாரதி.

இது போன்ற காரணங்கள் ஒரு புறமிருக்க, சென்டினல் மக்களுக்கு வெளியுலகில் இருக்கும் நோய்களை எதிர்க்கு மளவுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்காது.

மற்றவர் களிடமிருந்து அவர்களு க்குத் தொற்று நோய்கள் பரவக் கூடிய ஆபத்து இருக்கிறது அதனால் தான் அங்கு யாரும் செல்லக் கூடாது என அறிவுறுத் தப்படுவ தாகவும் சொல்லப் படுகிறது.

மருத்துவ ரீதியாக இது எந்தளவுக்கு உண்மை என்பது பற்றி விளக்குகிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவத் துறைப் பேராசிரியர் ரகுநந்தனன் பேராசிரியர் ரகுநந்தனன்.

பழங்குடி மக்களுக்குக் காட்டில் இயற்கை யாகச் சூரிய ஒளி நேரடி யாகக் கிடைக்கிறது. சுத்தமான காற்றை சுவாசித்து வருகிறார்கள். நல்ல சுகாதாரமான தண்ணீரைக் குடித்து வாழ்கிறார்கள்.

இயற்கையான காய்கறிகள், பழங்கள் போன்றவை அங்கே கிடைக்கின்றன. அதைச் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியமான உடலமைப்புடன் இருக்கிறார்கள்.

காட்டில் நோய்களை உண்டாக்கக் கூடிய கிருமிகளும் குறைவாகத் தான் இருக்கும். 

அதனால், வெளியில் இருந்து யாராவது உள்ளே செல்லும் போது செல்பவர்களிடமிருந்து அவர்களு க்குத் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பி ருக்கிறது.
ஏன் சென்டினல்கள் வெளியாட்களைத் தாக்குகிறார்கள்?
நம்மைப் போன்று நோய்களு க்கான தடுப்பூசி களும் அவர்கள் போட்டு க்கொண்ட தில்லை. அதனால், மிக விரைவாக நோய்கள் தாக்கி விடும். அவர்களின் உணவுமுறை, மருத்துவ முறையும் நமக்குத் தெரியாது.

அவர்கள் காட்டை விட்டு வெளியில் வந்தாலும் உடல் ரீதியாகப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப் பிருக்கிறது.

அதே போல் வெளியில் இருந்து காட்டுக்குள் செல்பவர்களுக்கும் ஏதேனும் தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பி ருக்கிறது. அதனால் அவர்களைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை முறை பற்றி முறையாகத்

தெரிந்து கொண்டு அவர்களை அணுகுவதே நல்லது’ என்கிறார் பேராசிரியர் ரகுநந்தனன்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings