நாளை முதல் பிளாஸ்டிக் தடை எதிரொலி - இனி மஞ்சப்பை தான் !

0
நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப் பட்டுள்ள தடை அமலுக்கு வர உள்ள நிலையில், துணிப் பைகள், மஞ்சப் பைகள் தயாரிக்கும் பணி சூடு பிடிக்க துவங்கி யுள்ளது. 
50 மைக்ரானு க்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்கோ, இருப்பு வைப்பதற்கோ தமிழகத்தில் தடை விதிக்கப் பட்டுள்ளது.

இயற்கை சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப் படுத்துவதற்கு ஒரு முயற்சியாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 


தொடக்கம் முதலே தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு எச்சரித்து வந்த போதிலும் அதன் பயன்பாடு குறைய வில்லை. 

குறிப்பாக சாலையோர கடைகள், பழக்கடைகள், ஓட்டல்களில் அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித் துள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாடு
மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தி, பறிமுதல் செய்தாலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைய வில்லை. 

இதை யடுத்து, 50 மைக்ரா னுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்கோ, இருப்பு வைப்பதற்கோ தமிழகத்தில் தடை விதிக்கப் பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படும்


அதன்படி வரும் ஜனவரி 1 முதல், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்றாலோ, இருப்பு வைத்திருந் தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. 

முதல் கட்டமாக, அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் செய்தால், தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். உரிமம் இன்றி கடை நடத்தினால், சீல் வைக்க ப்படும்.

அபராதம் விதிக்க முடிவு

வியாபாரிகளுக்கு மட்டும் அல்ல, பொது மக்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் பட்சத்தில், அபராதம் விதிக்கப்படும். 


நாளை முதல் அமுலுக்கு வரும் தடை உத்தரவு, பொது மக்களை மீண்டும் மஞ்சப்பை எனும் துணிப்பை பக்கம் திரும்ப வைத்துள்ளது.

மஞ்சப்பை தயாரிப்பு

தடை உத்தரவு தீவிரமாக பின் பற்றப்படும் என்ற நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் துணிப் பைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 

தையல் கலைஞர் களிடம் இருந்து துணிப் பைகளை மொத்த வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்று வருகின்றனர். மக்களால் மறந்தே விட்ட மஞ்சப்பை தற்போது மீண்டும் வர தொடங்க உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings