ஆண்களுக்கான அடிவயிற்று உடற்பயிற்சி !

0
• முதலில் தரையில் மல்லாக்க படுத்துக் கொண்டு தலையின் பின்புறம் இரு கைகளாலும் லேசாக பிடித்துக் கொள்ள வேண்டும். 


பின்னர், வலது முழங்கையை கொண்டு இடது முழங்காலை நோக்கி தொட வேண்டும்.

பின் அதை அப்படியே மாற்றி இடது முழங்கை யால் வலது முழங்காலை தொட வேண்டும். 

இதே போல் 10 முதல் 15 வரை செய்தால் போதுமானது. ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. 

பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முறை செய்யலாம். இது ஒரு மிக சிறந்த மற்றும் எளிதான வழியாகும். 

இதை சைக்கிள் பயிற்சி என கூறுவர்.

• தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் தரையில் படும்படி நீட்டி வைத்து கொள்ள வேண்டும். 


பின்னர் இரண்டு கால்களையும் செங்குத்தாக மேலே தூக்கி மெதுவாக கீழிறக்க வேண்டும். 

இப்படி செய்யும் போது முழங்கால் மடங்காமல் இருக்க வேண்டும் அப்படி செய்தால் தான் மிகவும் பயனுள்ள தாக இருக்கும்.

இது அடிவயிற்று சதை குறைய ஒரு சிறந்த மற்றும் எளிதான பயிற்சி யாகும். 

இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 20 முறை செய்தால் போதுமானது. 

பின்னர் படிப்படி யாக எண்ணி க்கையின் அளவை அதிகரித்து 40 முதல் 50 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)