எங்களைத் தடுத்தால் வேறு யாரும் ஏற்றுமதி செய்ய முடியாது... ஈரான் !

0
எங்களது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா நிறுத்தினால், வேறு எந்த கல்ஃப் நாடுகளும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாது என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
எங்களைத் தடுத்தால் வேறு யாரும் ஏற்றுமதி செய்ய முடியாது... ஈரான் !
இது குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி பேசும் போது, ”ஈரான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை அமெரிக்கா வால் தடுத்து நிறுத்த முடியாது. 

ஒருவேளை கல்ஃப் நாடுகளின் கடல் பாதையில் ஈரானின் கப்பலைத் தடுக்க முயன்றால், அந்தப் பாதையே அடைக்கப்படும்.

அமெரிக்கா வுக்கு நாங்கள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வது நன்கு தெரியும். தொடர்ந்து நாங்கள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வோம். அவர்களால் அதனைத் தடுக்க முடியாது. 

எனினும் ஒரு நாள் எங்களது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அவர்கள் தடுக்க எண்ணினால் வேறு யாரும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாது” என்று கூறினார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுட னான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் 

ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக் காரத்தன மானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுட னான ஒப்பந்தத்தி லிருந்து அமெரிக்கா விலகியது.
ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. 

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் 

இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings