இந்திய ஸ்டென்ட் கருவி பெஸ்ட் - அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேசன் !

0
ஸ்டென்ட் தயாரிக்கும் இந்திய நிறுவனங்கள், இனிப்பெருமையுடன் தங்களின் தரம் குறித்துப் பேசலாம். 
இந்திய ஸ்டென்ட் கருவி பெஸ்ட் - அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேசன் !

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட்களை உபயோகிப்ப வர்களுக்கு, அதிக பட்சம் 3 சதவிகிதம் மட்டுமே மீண்டும் `அட்டாக்' வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது. 

இதையும் குறைப்பதற் கான முயற்சியில் நாங்கள் இப்போது இறங்கி யுள்ளோம்.

இந்தியன் ஸ்டென்ட் கருவியே பெஸ்ட்... அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேசன் அறிவிப்பு!

வழக்கமாக வெளிநாடுகளில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், மருந்துகள், உபகரணங்கள் தான் சிறந்தவை என்று ஓர் எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. 
அதைப் பொய்யாக்கும் வகையில் இருக்கிறது, இதயம் தொடர்பாக சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வு முடிவு. அது நம்மைப் பெருமையடைய வைத்துள்ளது. 

இதயத் தமனிகளில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால், அதைச் சரி செய்வதற் காக அந்த உறுப்பில் பொருத்தப்படும் ஒரு பொருள் தான் ஸ்டென்ட் (Stent). 

பொதுவாக, இதய அடைப்புகளைச் சரி செய்ய ஓபன் ஹார்ட் சர்ஜரி, ஸ்டென்ட் வைப்பது போன்றவை பரிந்துரைக் கப்படும். 

அடைப்பின் அளவு மிகக் குறைவாக இருந்தால், மருந்து அல்லது மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். இவற்றில் மற்ற சிகிச்சைகளைக் காட்டிலும், பொருத்த மான சிகிச்சை ஸ்டென்ட் பொருத்துவது தான். 

ஸ்டென்ட் வகைகள் தரமானது தானா
இந்திய ஸ்டென்ட் கருவி பெஸ்ட் - அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேசன் !

ஆனாலும், மருத்துவ உலகில் உள்ளவர் களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட் வகைகள் நிஜமாகவே தரமானது தானா என்ற சந்தேகம் இருக்கிறது. 

கடந்த ஆண்டு நிகழ்ந்த ஒரு நிகழ்வுக்குப் பிறகு இப்படியான சந்தேகங்கள் வலுபெறத் தொடங்கின. அரசு சார்பில் திடீரென ஸ்டென்ட் விற்பனையின் விலை 75 சதவிகிதம் குறைக்கப் பட்டது. 

அதை ஏற்க முடியாத சில தனியார் வெளிநாட்டு அமைப்புகள், தனியார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியச் சந்தைக்கு எங்கள் தயாரிப்பில் வெளியாகும் ஸ்டென்ட்களை விற்பனைக்குக் கொண்டு வர மாட்டோம்' என்று கடுமை யாகச் சாடின. 

அது மட்டுமன்றி, `இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட்களை விடவும், தங்களுடையதே தரத்தில் உயர்ந்தது' என்றும் குறிப்பிட்டன. 
மிகக் குறைவான மருத்துவர் களே இதை எதிர்த்து குரல் கொடுத்தனர் என்றொரு குற்றச் சாட்டும் அந்தச் சமயத்தில் எழுந்தது. 

உண்மையில், இப்படிப் பட்ட ஆதாரமற்ற விமர்சனங் களை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் இதயநோய் நிபுணர்களும் தடுமாறினர். 

ஸ்டென்ட் குறித்த ஆய்வு

இந்தநிலை யில், அமெரிக்காவில் சிகாகோ நகரில் உள்ள அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேசன் (American Heart Association) சார்பில் நடத்தப்பட்ட ஸ்டென்ட் குறித்த ஆய்வு ஒன்றின் முடிவு கடந்த வாரத்தில் வெளியாகி யுள்ளது. 

அதில், `மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட் வகைகளை விட, இந்தியாவில் தயாரிக்கப்படும்  ஸ்டென்ட் வகைகள் எந்த விதத்திலும் குறைந்த தல்ல' எனக் குறிப்பிடப் பட்டிருந்தது. 

ஸ்டென்ட் வகைகளின் தரத்தைப் பரிசோதிப்ப தற்காக கடந்த பத்து ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டு முடிவு வெளியிடப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

ஸ்டென்ட் 
இந்திய ஸ்டென்ட் கருவி பெஸ்ட் - அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேசன் !

இந்தியாவில் தயாரிக்கப்படும் `Yukon Choice Pic' என்ற ஸ்டென்ட், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Xience வகை ஸ்டென்ட் ஆகியவை இந்த ஆய்வில் உட்படுத்தப் பட்டு ஒப்பிடப் பட்டுள்ளன. 

பத்து ஆண்டுகளாகக் கண்காணிக் கப்பட்ட இந்த ஆய்வில், இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தயாரிக்கப்படும் `Supra Flex' என்ற ஸ்டென்ட் வகையும் சேர்க்கப் பட்டது. 

ஏறத்தாழ 2500-க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆய்வில் பங்கெடுத் துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் செய்யப்பட்ட `TALENT' என்ற ஆய்விலும், இப்படியான ஒரு முடிவுதான் வெளியானது. 

ஒரு வருட காலம் நடைபெற்ற இந்த ஆய்வு, முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட் வகைகளின் தரத்தைப் பரிசோதிப் பதற்காகத் தான் செய்யப்பட்டது. 
ஸ்டென்ட் தரம் 

2017-ன் போது உருவான பிரச்னையின் உண்மைத் தன்மையை அறிவதற் காகவே இந்த ஆய்வு நடத்தப் பட்டது. இதை முன்னெடுத்துச் செய்த இதய நோய் சிகிச்சை நிபுணர் உபேந்திர கௌல் கூறும் போது, 

`இதய நோய்க்காகச் சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மத்தி யிலேயே `நம் நாட்டில் தயாரிக்கும் ஸ்டென்ட் வகைகளைக் காட்டிலும், 

வெளி நாடுகளி லிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டென்ட்கள் தான் சிறந்தது' என்ற எண்ணம் மிகுந்திருக்கிறது. 

எங்களுடைய ஆய்வு அப்படியான பொய்யான, ஆதாரமற்ற நம்பிக்கை களை உடைத்தி ருக்கிறது. ஸ்டென்ட் தயாரிக்கும் இந்திய நிறுவனங்கள், இனிப் பெருமை யுடன் தங்களின் தரம் குறித்துப் பேசலாம். 

தற்போது இந்தியா வில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட்களை உபயோகிப் பவர்களுக்கு, அதிக பட்சம் 3 சதவிகிதம் மட்டுமே மீண்டும் `அட்டாக்' வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது. 

இதையும் குறைப்ப தற்கான முயற்சியில் நாங்கள் இப்போது இறங்கி யுள்ளோம்" என்று கூறியுள்ளார். 

மகிழ்ச்சியான செய்தி
இந்திய ஸ்டென்ட் கருவி பெஸ்ட் - அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேசன் !

சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை நிபுணர் செங்கோட்டு வேலு விடம் இது குறித்துப் பேசினோம். 

தர வரிசையில் பரிசோதிக்கப்படும் போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட்கள் தான் சிறந்தவை என்று கூறியிருப்பது மகிழ்ச்சியான செய்தி. 

இந்த ஆய்வுகளின் முடிவுகள், மருத்து வத்தில் அடுத்தடுத்த கட்டத்துக்கு நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம், வளர்கிறோம் என்பதற்கான சிறந்த உதாரணம். 
இந்தியாவைப் பொறுத்த வரையில், அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் இதய நோய்கள் முக்கியமானவை. அதிகம் பேருக்கு ஏற்படும் இதயப் பிரச்னை, `கரோனரி ஹார்ட் டிசீஸ்' (Coronary heart disease).

இவற்றைச் சரி செய்வதற் காக உபயோகப் படுத்தப்படுவது தான் ஸ்டென்ட். அதற்காக, எல்லா அடைப்புக்கும் ஸ்டென்ட் உபயோகிப்போம் என்று அர்த்தமல்ல. 

இதயத்தி லுள்ள அடைப்பின் அளவைப் பொறுத்துத் தான், ஸ்டென்ட் வைப்பதா,  அறுவை சிகிச்சை செய்வதா, மருந்து மட்டும் தருவதா என்று முடிவெடுப்போம். 

இதயத்தில் ஏற்பட்டிரு க்கும் குறிப்பிட்ட அந்த அடைப்பை, சிறிய அளவிலான பலூன் ஒன்றின் உதவியோடு `ஆஞ்சியோ ப்ளாஸ்டி' செய்தும் கூட நீக்கலாம். 

ஆனால் அப்படியான அடைப்பு நீக்கம் தற்காலிக மானதாக இருக்கலாம். அவர்களுக்கு மீண்டும் அடைப்பு ஏற்படுவதற் கான வாய்ப்பு, 40 சதவிகிதம் உள்ளது. 

இதுவே, ஸ்டென்ட் வைத்தால் அதிக பட்சம் 5 சதவிகிதம் தான் மீண்டும் அடைப்பு ஏற்படக் கூடும். ஸ்டென்ட், மிகவும் பாதுகாப்பான சிகிச்சை என்பதால் பயப்பட வேண்டிய அவசிய மில்லை" என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings