மாணவிக ளின் பாதுகாப்புக் கருதி, பெற்றோருக்குக் குறுஞ்செய்தி தகவல் !

0
பள்ளி மாணவிக ளின் பாதுகாப்புக் கருதி, மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்வதைக்
குறுஞ்செய்தி மூலம் பெற்றோர் களுக்குத் தெரிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இன்றைய கால கட்டத்தில் தொழில் நுட்ப வசதிகள் அனைத்தும் மக்களுக்குப் பயன்படும் வகையில் இருக்கின்றன.


அரசு பள்ளிகளில் கூட பல்வேறு புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதன் ஒரு கட்டமாகத் தான் அரசு மகளிர் பள்ளிகளில் மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்வதைப்

பெற்றோரு க்குக் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப் படுத்தப்படும்

என்று பள்ளிக் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.  செங்கோட்டையன் தெரிவித் துள்ளார்.

தனியார் பள்ளிகளு க்குத் தற்காலிக அங்கீகாரம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் உள்ள மெட்ரிக்குலேஷன்

பள்ளி களுக்குத் தற்காலிகத் தொடர் அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் 257 பள்ளிகளின் நிர்வாகி களுக்குத் தொடர் அங்கீகார ஆணையை வழங்கினார்.

பின்பு அந்த நிகழ்ச்சியில் பேசும் போது, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும்

மாணவர் களின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டிட வரன்முறை பெற வேண்டும் என்ற


நிபந்தனை அடிப்படை யில் தற்காலிக அங்கீகாரம் அளித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், இதுவரை 1,183 பள்ளிகளு க்கும், தற்போது 257 பள்ளிகளு க்கும், அடுத்த இரண்டு

மூன்று நாட்களில் 412 பள்ளிகளு க்கும் ஆணை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

மாணவிகள் வருகை குறித்துப் பெற்றோருக்கு குறுஞ்செய்தி

நிகழ்ச்சி யின் முடிவில் செய்தி யாளர்களைச் சந்தித்த அமைச்சர், மாணவி களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 
அவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதை அவர்களின் பெற்றோரு க்குக் குறுஞ்செய்தி மூலம்

உடனடியாகத் தெரிவிக்கும் திட்டத்தை அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப்

பள்ளிக ளில் விரைவில் செயல்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.
தற்சமயம் சோதனை அடிப்படை யில், சென்னை போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

இந்த வசதி மூலம் தங்கள் குழந்தைகள் எப்போது பள்ளி சென்றனர்,
பின்பு எப்போது அங்கிருந்து புறப்பட்டனர் என்பதையும் பெற்றோர் கைபேசி குறுஞ்செய்தி மூலம் உடனடி யாகத் தெரிந்து கொள்ள முடியும்.


குறிப்பாக இந்தத் திட்டத்தில் ஆர்எப்ஐடி (RFID) என்ற தொழில்நுட்ப சாதனம் பயன் படுத்தப் படுகிறது.

முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் அரசு மகளிர் பள்ளிகளில்

இவ்வசதி ஏற்படுத் தப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)