சீட்டு கட்டில் 8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கி றீர்களா?

0
சீட்டாட்டம் என்பது பல்வேறு எண்களையும், குறியீடு களையும் கொண்ட கார்டுகளை வைத்து ஆடும் ஒரு விளையாட்டு. 
ஆட்டத்தின் வகை வேறு பட்டாலும் உலகம் முழுவதிலும் ஒரே விதமான கார்டுகளே இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும். 

உலகம் முழுக்க பிரபலமான இதை விளை யாடாதவர்கள் யாருமே இருக்க முடியாது. 


அப்படி விளை யாடாதவர்கள் கூட சீட்டுகளைப் பார்த்திருப்பார்கள். 

சீட்டாட்டம் பொழுது போக்காகவும், சூதாட்ட மாகவும் ஆடப்படுவ துண்டு. 

ஆனால், இந்தச் சீட்டுகளில் யாருமே கவனித்திருக்காத ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறார் ஒருவர். 

Plink என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து ஒருவர், " 8 டைமண்ட் என்ற சீட்டின் நடுவில் மறைந்துள்ள 

மற்றொரு 8 - ஐப் பார்த்த போது உங்களுக்கு என்ன வயது? " என்பதை ஒரு கேள்வியாகப் பதிவு செய்திருந்தார்.

அதை உன்னிப்பாகக் கவனிக்கும் போதுதான் 8 டைமண்ட் சீட்டின் போட்டோ வின் நடுவே மறைந்திருக்கும் 8 என்ற எண் பலரது கண்களுக்கும் புலப்பட்டது. 

உடனே இந்த விஷயம் ட்விட்டரில் வேகமாகப் பரவியது. 

அதைப் பார்த்த அனைவருமே இதை முதல் தடவையாகப் பார்க்கிறோம் என்றே பதிலளித் திருக்கிறார்கள். 


"அட இந்த விஷயம் இவ்வளவு நாள் தெரியாமப் போச்சேப்பானு" ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள் ட்விட்டர் வாசிகள். 

அது சரி இந்த விஷயம் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா ? 

அல்லது இப்படி ஒன்று இருப்பதை எப்பொழுது தெரிந்து கொண்டீர்கள் என்பதை கமெண்டில் தெரிவிக்கலாமே.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings