ஆன்-லைன் மூலம் வீடுகளுக்கு மது சப்ளை மந்திரி சந்திரசேகர் தகவல் !

0
மராட்டியத்தில் ஆன்-லைன் மூலம் வீடுகளுக்கு மது பானங்களை சப்ளை செய்ய மாநில அரசு 
அனுமதி அளிக்க திட்ட மிட்டுள்ளதாக கலால் வரித்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே தெரிவித்தார்.

மராட்டியத்தில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர் களால் அதிகளவு விபத்துகள் நடக்கின்றன. 

இதற்கு ஆன்-லைனில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

எனவே பொது மக்கள் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க ஆன் -லைனில் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க மராட்டிய அரசு திட்டமிட்டு உள்ளது.

இது குறித்து மாநில கலால் வரித்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், பொது மக்கள் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க விரும்புகிறோம். 

மது பானங்கள் வீடுகளுக்கு சப்ளை செய்யப் பட்டால் அது மதுகுடிப்பவர் களுக்கு உதவியாக இருக்கும்” என்றார்.

எனினும் அவர் இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து கூற மறுத்து விட்டார்.

வருவாயை அதிகரிக்க...

இது குறித்து கலால் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகை யில், “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து 

மாநிலத்தில் நெடுஞ்சாலை யோரம் இருந்த சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டன. 

இதனால் அரசுக்கு ரூ.15 ஆயிரத்து 343 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இதே போல பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி குறைப்பினாலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே ஆன்-லைனில் மதுபான விற்பனைக்கு அனுமதி அளித்தால் அதிக வருவாய் கிடைக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.

எனவே வருவாயை குறி வைத்தே அரசு இந்த திட்டத்தை அறிமுகப் படுத்த முடிவு செய்துள்ளது” என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)