நில அதிர்வில் சடலங்கள் இடிப்பாடுகளுக்கு இடையே இருக்கலாம் !

0
இந்தோநேசியா வின் பாலு நகரத்தில் இடம் பெற்ற பாரிய நில அதிர்வினால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்தோநேசிய அதிகாரிகள் இன்று இந்த தகவலை வெளியிட் டுள்ளனர். கடந்த 28ஆம் திகதி ஏற்பட்ட 7.5 மொக்னிடியூட் அளவான நிலஅதிர்வை அடுத்து ஏற்ட்ட சுனாமி காரணமாக பாரிய உயிரிழப்புகள் இடம் பெற்றன.

இந்தநிலையில், இது வரை ஆயிரத்து 763 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. எவ்வாறாயினும் பாரிய பாதிப்புக்குள் உள்ளான பாலு மற்றும் 


பலரோவா ஆகிய பகுதிகளில் மேலும் ஆயிரக்கணக் கான சடலங்கள் இடிப்பாடு களுக்கு இடையே இருக்கலாம் என அச்சம் வெளியிட் டுள்ளது.

அனர்த்தம் இடம்பெற்று 9 நாட்களான நிலையிலும் உரிய எண்ணிகை யிலான உயிரிழப்புக்களோ அல்லது சேதங்களோ குறித்து மதிப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ள தாக குறிப்பிடப் பட்டுள்ளது.

மீட்பு பணியாளர்கள் பெறும் எண்ணிக்கையில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போதிலும் உயிருடன் எவரையும் மீட்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என குறிப்பிடப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings