இலவச ஆசை காட்டி மொத்தமாக பிடுங்க பார்க்கும் குழுமம்... எச்சரிக்கை !

0
சமீப காலமாக எஸ்சிவி நிறுவனத்தின் ஒப்பந்தம் குறித்து பல சர்ச்சைகள் உண்டாகி யுள்ளது. அனைத்து சர்ச்சைகளுக்கும் உச்ச கட்டமாக தற்போது திருநெல்வேலியில் கேபிள் டிவி தொழில் நடத்தி வரும்
இலவச ஆசை காட்டி மொத்தமாக பிடுங்க பார்க்கும் குழுமம்... எச்சரிக்கை  !
சந்திரா வீடியோஸ் உரிமையாளர் திரு ராமச்சந்திரன் அவர்களுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸை எஸ்சிவி நிறுவனம் அனுப்பி யுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் குறிப்பிட்ட ஆபரேட்டரை ஒட்டு மொத்தமாக அழிக்கும் எண்ணத்தோடும் 

அவரைத் தொழிலை விட்டே துரத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தோடும் அனுப்பப்பட்ட நோட்டீஸா கவே தெரிகிறது.

எஸ்சிவி நிறுவனத்தைப் பொறுத்தவரை செட்டாப் பாக்ஸ் இலவசம் என்று ஆபரேட்டரை ஆசை காட்டி உள்ளே இழுத்த பின்னர் பல பிரச்சினை களை சமாளிக்க முடியாமல் அங்கிருந்து வெளியேற நினைத்தால்

அந்த ஆபரேட்டரை தொழிலிலேயே இல்லாமல் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு இவ்வாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வருகிறது.

நோட்டீஸில் இருப்பது என்ன?

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஆப்ரேட்டர் ஏழு வருடங்களுக்கு அங்கிருந்து வெளியேறக் கூடாது.

மீறி வெளியேறும் போது ஒரு செட் டாப் பாக்ஸிற்கு ஏறத்தாழ 1155 ரூபாய் செலுத்த வேண்டும் அதோடு மட்டுமல்லாது,
ஆப்ரேட்டர் எஸ்சிவி நிறுவனத்தை விட்டு வெளியேறுவதால் அந்த நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பிற்காக ஒரு செட்டாப் பாக்ஸிற்கு ரூபாய் 4068 இழப்பீடாக செலுத்த வேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது.

ஆக மொத்தம் ஒரு இணைப்பிற்கு ரூபாய் 5223 அபராதமாக செலுத்த வேண்டும். 

தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஒரு இணைப்பின் விலை சராசரியாக 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 வரை தான்

ஆனால் எஸ் வி யில் சிக்கல் எடுத்த பாவத்திற்காக ராமச்சந்திரன் அவர்கள் ஒரு இணைப்பிற்கு ரூ 5223 செலுத்த வேண்டும் என்கிறது எஸ்சிவி நிறுவனம்.

ஆப்பரேட்டர் களை அழைக்கும் போது இலவச செட்டாப் பாக்ஸ் என்றும் ஆறுமாதம் பேக்கேஜ் இலவசம் என்றும் ஆசை வார்த்தை களைக் கூறி அழைத்துச் சென்றவர்கள், 

ஆப்பரேட்டர்கள் வெளியேற நினைக்கும் போது அவர்களது இணைப்புகளை பிடுங்குவது போல் திட்டமிட்டு ஒப்பந்தம் கையெழுத்து வாங்கப் பட்டு உள்ளது போல் தோன்றுகிறது.
சாதாரணமாக TRAI இன் அறிவுறுத்தல் படி போட வேண்டிய ஒப்பந்தத்தில் எந்த ஒரு காலக்கெடுவும் விதிக்க முடியாது.

ஆப்பரேட்டர் வெளியேறுவதாக இருந்தாலும் சரி எம் எஸ் ஓ ஆபரேட்டர் க்கான இணைப்பு துண்டிப்பதாக இருந்தாலும் சரி

21 நாளுக்கு முன்னர் நோட்டீஸ் கொடுத்து அதன் பின்னர் அவரவர் விருப்பம் போல் செயல் படலாம்.

ஆனால் எஸ்சிவி போன்ற ஒரு பெரிய நிறுவனமே ஒப்பந்த விஷயத்தில் மிகப்பெரிய மோசடி செய்து ஆபரேட்டர்க ளை ஒழித்துக் கட்டும் வேலையை செய்து வருவது வருந்தத்தக்க விஷயம்.

இந்த விஷயத்தில் ஆப்பரேட்டர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

எதற்காக என்று தெரியாமலே காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்திட்டு விட்டு பின்னர் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்க வேண்டாம்.

இலவசம் என்று வந்தால் அத்துடன் ஆபத்தும் கைகோர்த்து வரும் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.
கடந்த காலங்களில் ஆபரேட்டர்கள் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாத எஸ்சிவி நிறுவனம் தற்போது இலவச செட்டாப் பாக்ஸ் 

ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை இலவச பேக்கேஜ் என்று இறங்கி வருவது ஏன் என்று சிந்திக்க வேண்டும்.

எஸ் வி போன்ற நிறுவனங்களின் இலவச வலையில் சிக்கி உங்கள் தொழிலை உங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்தி அனுப்பப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings