இந்துக்கள் கொண்டாடும் மதநல்லிணக்கம் பண்டிகை மொகரம் !

0
தஞ்சாவூர் அருகே, இஸ்லாமியர்கள் ஒருவர் கூட வசிக்காத நிலையில், மதநல்லிணக் கத்தை வலியுறுத்தும் வகையில், 
அந்த கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள், 300 ஆண்டு களுக்கும் மேலாக, மொகரம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே, காசவளநாடு புதுார் கிராமத்தில், 300 ஆண்டு களுக்கும் மேலாக,

இஸ்லாமியர் களின் பண்டிகையான மொகரத்தை, இந்துக்கள் வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் கொண்டாடும், மொகரம் திருநாள் அன்று, இந்த விழா கொண்டாடப் பட்டு வருகிறது.
இதற்காக, மொகரம் பண்டிகைக்கு, பத்து நாள் முன், விரதம் இருந்து, அல்லா என்றழைக்க ப்படும்


உள்ளங்கை உருவத்தை வெளியே எடுத்து வைத்து, அதற்கு தினமும் பூஜை செய்கின்றனர்.
தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, ஊரின் மையத்தில் உள்ள மசூதி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு, ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.
பின், நள்ளிரவு தொடங்கி, அல்லா என்றழைக்கப் படும், உள்ளங்கை திருவுருவத்தை வீதியுலாவாக அதிகாலை வரை எடுத்துச் சென்றனர்.

அப்போது, வீடுகளில் புதிய மண் கலயத்தில் பானகம் கரைத்து, அவல், தேங்காய், பழம் வைத்து, பெண்கள், அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டனர்.

பின், நேற்று காலை, அல்லா மசூதி முன் தீ மிதி நடந்தது.

இதில் ஏராளமானோர் தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்ற கோரி, தீயில் இறங்கி அல்லாவை வழிபட்டனர்.
இதே போல், கொ. வல்லுண்டாம் பட்டு கிராமத்திலும் நேற்று முன்தினம் அல்லா விழா தொடங்கியது.

பின், நேற்று காலை, தீ மிதியில் ஏராளமான பக்தர்கள், தீயில் இறங்கி அல்லாவை வழிபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, முதுவன் திடல் கிராமத்தில், மொகரம் பண்டிகையை முன்னிட்டு,

'இந்துக்கள்' முஸ்லிம் பள்ளிவாசல் முன், தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீமையை எதிர்த்து நபிகள் நாயகம் போரிட்ட நாள், மொகரமாக அனுசரிக்கப் படுகிறது.

அன்று, முஸ்லிம்கள் தங்களை வருத்தி, நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

முதுவன் திடல் கிராமத்தில் நடக்கும் எந்த விசேஷங் களுக்கும், முதல் மரியாதை, பாத்திமா பள்ளி வாசலுக்கு தான் அளிக்கப் படுகிறது.


மொகரம் பண்டிகைக் காக, ஒரு வாரத்திற்கு முன், பள்ளிவாசல் முன் கொடியேற்றம் நடைபெறும்.

அன்றிலிருந்து, ஆண், பெண்கள் விரதமிருப்பர்.

ஆண்கள், மொகரம் பண்டிகையன்று அதிகாலை, கண்மாயில் நீராடி, பள்ளிவாசல் முன்

அமைக்கப்பட்ட பெரிய பள்ளங்களில் தீ வார்த்து, அதில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர்.

தீக்குழி இறங்கும் முன், வெறும் கைகளால் தீ கங்குகளை தலையில் வாரி இறைத்து கொள்வர்.
பெண்கள், தலையில் முக்காடிட்டு அமர, அவர்கள் தலையில் தீ கங்குகளை அள்ளி கொட்டுவர்.

பின், சப்பர ஊர்வலம் நடைபெறும். முன்னதாக, தீக்குழி இறங்கும் பக்தர்களுக்கு, முஸ்லிம் பெரியவர் திருநீறு பூசி, ஆசி வழங்குவார்.

தீக்குழி இறங்கும் வைபவத்தை முன்னிட்டு, ஏராளமானோர் திரண்டிருந்தனர். விடிய விடிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings