மும்பையில் பெண் ஒருவர், ஓடும் ரயிலில் தொங்கியபடி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்
வகையிலான சாகசங்களை செய்து அட்டகாசத் தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி யுள்ளன.
கடந்த வெள்ளியன்று இரவு பதினொன்றரை மணிக்கு, ரியே ரோடு (Reay Road) ஸ்டேசனில் இருந்து,
காட்டன் கிரீன் ஸ்டேசனு க்குச் செல்லும் போது, பெண் ஒருவர், முதல் வகுப்பு ரயில் பெட்டி நுழை வாயிலில் உள்ள
நடுப்புறக் கைப்பிடிக் கம்பியைப் பிடித்துக் கொண்டு, ஓடும் ரயிலில் தொங்கியபடி,
பக்க வாட்டில் வரும் கம்பங்களைத் தொட்டு விளை யாடியதோடு, ரயில் நிற்கும் முன்பே நடைமேடையில் குதித்துச் செல்கிறார்.
மும்பையில் இது போல் பல குற்றங்கள் நடந்த போதும் முதன் முறையாக பெண் ஒருவர்
இது போன்ற வீடியோ மூலம் சிக்கி யுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற ஆபத்தான விளை யாட்டுக்களில் பலர் உயிரிழந் ததைச் சுட்டிக் காட்டியுள்ள போலீசார்,
ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி மூலம் அப்பெண்ணைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.
Thanks for Your Comments