தந்தை தீர்ப்பை மாற்றிய மகன் - சுப்ரீம் கோர்ட் !

0
கள்ள உறவு தொடர்பாக இன்று தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 


முன்பு அவரது தந்தை ஒய்.வி.சந்திரசூட் அளித்த தீர்ப்புக்கு மாறான தீர்ப்பை வழங்கினார்.

கள்ள உறவு தொடர்பாக வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. 

நீதிபதிகளில் ஒருவரான டி.ஒய்.சந்திரசூட் அளித்த தீர்ப்பில், கள்ள உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு 5 ஆண்டு 

சிறை தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 497 வது பிரிவை நீக்கியதுடன், பெண்களை சமமாக மதிக்காத எந்த சட்டமும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. 

பெண்ணின் விருப்பத்தை சாதாரண மாக எடுத்து கொள்ள முடியாது. அது அவரின் உணர்வு. அதில் எந்த விதிகளும் விதிக்கப்படக் கூடாது எனக் கூறினார்.

அதே நேரத்தில், 1985ல் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருந்த அவரது தந்தை ஓய்.வி.சந்திரசூட், கள்ள உறவு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தார். 


அப்போது, கணவருக்கு தெரியாமல் அவரது மனைவி யுடன், கள்ள உறவில் ஈடுபடும் நபருக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை உறுதி செய்தார். 

மேலும், கள்ள உறவில் ஈடுபடுவதை குற்றமாக கருதினால் தான், திருமண உறவு பலப்படும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

தனிப்பட்ட உரிமை

அதே போல், தனிப்பட்ட உரிமை குறித்த வழக்கிலும், தந்தை சந்திரசூட் அளித்த தீர்ப்புக்கு மாறாக மகன் தீர்ப்பு வழங்கி யுள்ளார்.

1975ல் எமெர்ஜென்சி அமல் படுத்தப்பட்ட போது, அடிப்படை உரிமைகளை, அப்போது பிரதமராக இருந்த இந்திரா நிறுத்தி வைத்தார். 

அப்போது, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஓய்.வி.சந்திரசூட் இடம் பெற்ற அமர்வு, தனி மனித உரிமை அடிப்படை உரிமை அல்ல என தீர்ப்பு வழங்கியது.

ஆனால், கடந்த ஆகஸ்ட்டில் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய டி.ஒய். சந்திரசூட், 


தனிப்பட்ட நபரின் வாழ்க்கை மற்றும் தனி நபர்களின் உரிமைகள் மாற்ற முடியாதது. 

எந்த அரசும் தனி நபர்களின் சுதந்திரத்தில் தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings