இந்தியாவில் குக் கிராமத்தில் வசிக்கும் மாணவனுக்கு அமெரிக்க நிறுவனத்தில் 70 லட்சம் ரூபாய்க்கு வேலை கிடைத்துள்ளது.
டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லமிய பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர் தான் முகமது அமீர் அலி.
12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்காத காரணத்தி னால், இன்ஜினியரிங் வாய்ப்பு பறிபோனது.
இருப்பினும் இவர் 2015-ஆம் ஆண்டு ஜமியா மில்லியா இஸ்லமியா கல்லூரியில் மெக்கானிகல் பிரிவில் டிப்ளமோ இஞ்னியரிங் சேர்ந்துள்ளார்.
இதை யடுத்து தொடர்ந்து படித்து வந்த முகமது அலி தன்னுடைய திறமையை வைத்து ஒரு புரோடோ டைப்
என்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சி ஒன்றை செய்துள்ளார்.
அதன் பின் அங்கிருக்கும் பேராசிரியர் ஒருவருக்கு மாணவனின் இந்த ஆராய்ச்சி பிடித்து போனதால் அதனை பல்கலைக் கழக இணைய தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இணையத்தில் உள்ள வீடியோவைக் கண்ட அமெரிக்காவைச் சேர்ந்த பிரிஸ்ஸின் மொடார் நிறுவனம் வியந்து போய்,
பாராட்டு தெரிவித்ததுடன் மாணவனுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கி யுள்ளது.
அமெரிக்க நிறுவனம் 70 லட்சம் ரூபாய் சம்பளத்திற்கு பல்கலைக் கழகத்தில் இருந்து வேலைக்கு எடுத்துள்ளது.
ஆண்டு வருமானமாக இது அவருக்கு கிடைக்க வுள்ளது. முகமது அலியின் தந்தை ஷம்ஷட் ஒரு எலக்ட்ரீசியன் ஆவார்.
இது குறித்து முகமது அலி கூறுகையில், தொடக்கத்தில் என்னுடைய ஆசிரியர்கள் யாரும் நம்பவில்லை.
இது எலக்டீரிசியன் பிரிவில் இது புதிய ஐடியா ஆகும். இருப்பினும், என்னுடைய உதவிப் பேராசிரியர்
வக்கார் ஆலம் தான் என்னிடம் உள்ள திறமையை அறிந்து கொண்டு ஊக்கப் படுத்தினார் என்று கூறியுள்ளார்.
Thanks for Your Comments