தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் இயங்காது !

0
தமிழகத்தில் நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் இன்று மாலை காலமானார். 

வாஜ்பாய் தனது 93 -வது வயதில் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.

பாரத ரத்னா விருது பெற்றுள்ள வாஜ்பாய் நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்துள்ளார். 

தங்க நாற்கர சாலை உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

உடல்நிலை மோசம்

கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். 

அவரது உடல்நிலை மோசமடைந்த தாக எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. 


இரங்கல்

இந்நிலையில் இன்று மாலை 5.5 மணிக்கு வாஜ்பாய் காலமானார். வாஜ்பாயின் மறைவுக்கு நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கப் பட்டு வருகிறது.

7 நாள் துக்கம்

வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. 

தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

பள்ளி கல்லூரிகள் இயங்காது

இதனால் தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. 

இதே போல் புதுச்சேரியிலும் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings