வாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக் கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் மாலை 5.5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

வாஜ்பாய் மறைவு தனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 7 நாள் துக்கம் அனுசரிக் கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 22ம் தேதி வரை துக்கம் அனுசரிக் கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதனிடையே வாஜ்பாய் மறைவை யொட்டி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவல கத்தில் அக்கட்சி கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.