சபரி மலையில் பெண்கள் வழிபாடு நடத்த உரிமை - உச்ச நீதிமன்றம் | Women in Sabarimala are entitled to worship - Supreme Court !

0
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லும் உரிமையை அரசியல் சட்டம் வழங்கி யுள்ளது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித் துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 41 நாள் கடும் விரதம் 

இருந்து இருமுடி சுமந்து வரும் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப் பட்டவர்கள் அனுமதிக்கப் படுவதில்லை.

பல நூறு ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அதில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சபரி மலை கோயிலு க்குள் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் ஏன் அனுமதிக்கப் படுவதில்லை என கேள்வி எழுப்பியது. 

மேலும் இது பாலின சமத்துவத்துக்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்தது. 

இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. 

இந்நிலையில இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி சந்திரசூட் கூறுகையில் ‘‘அனைவருமே கடவுளின் படைப்பு என்கிற போது, எப்படி வேறுபாடு ஏற்படும். 

பக்தர்களிடம் வேறுபாடு காட்டப் படுவதை ஏற்க முடியாது. வழிபாடு செய்வது அனைவரு க்கும் உள்ள சட்டப் படியான உரிமை. 

குறிப்பிட்டவர் களை கோயிலுக்கு வரக்கூடாது எனக் கூறுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. 


எனவே அனைத்து தரப்பினரும் கோயிலுக்கு செல்லலாம். 

இதற்கு தனியாக சட்டங்கள் தேவை. அரசியல் சட்டம் பெண்களுக்கு வழிபாட்டு உரிமையை வழங்கி யுள்ளது’’ எனக் கூறினார்.

இந்த வழக்கில் கேரள மாநில அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜே.டி.குப்தா, 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் பாகுபாடின்றி வழிபாடு நடத்தலாம் என்பதே கேரள மாநில அரசின் நிலைப்பாடு என தெரிவித்தனர். 

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு அப்படியானால் மாநில அரசு தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்வது 

ஏன் என கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கேரள அறநிலையத் துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன், 

“சபரி மலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே மாநில அரசின் நிலைப்பாடு. 

இது தொடர்பாக ஏற்கெனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். 

திருவாங்கூர் தேவசம் போர்டும் மாநில அரசின் நிலைப் பாட்டுக்கு ஆதரவு அளித்துள்ளது” என கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings