வீட்டுக்குள் குளம் வெட்டிய ஆசிரியர்... கிராம மக்கள் பாராட்டு !

0
கேரள மாநிலம், மலப்புரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் மழை நீரைச் சேகரித்து, வீட்டின் வளாகத்தில் மினி டேம் போல வெட்டி நீரை சேகரித்து வைத்துள்ளார்.
வீட்டுக்குள் குளம் வெட்டிய ஆசிரியர்... கிராம மக்கள் பாராட்டு !
இந்தச் சிறிய குளத்தின் மூலம் அந்தக் கிராமத்தில் உள்ள மக்களின் வீடுகளின் கிணற்று நீரின் மட்டம் உயர்ந்துள்ளது. மலப்புரம் அருகே மக்காரபரம்பா கிராம பஞ்சாயத்து உள்ளது. 

இந்த கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பெரும்பள்ளி அகமது. இவரை அந்தக் கிராமத்து மக்கள் அகமது மாஸ்டர் என்றே அழைக்கிறார்கள்.

ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், பெரும்பள்ளி மாஸ்டர், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

அதில் முக்கியமானது மழைநீர் சேகரிப்புத் திட்டமாகும். இந்த கிராமத்து மக்களுக்கு மழை நீரி சேகரிப்புத் திட்டத்தின் மகத்துவ த்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அதுமட்டு மல்லாமல் தனதுவீட்டின் வளாகத்தில் சிறிய செக்டேம், அல்லது குளம் போன்று அமைத்து அதில் ஒரு லட்சம் லிட்டருக்கும் அதிகமான மழைநீர் சேமித்து வைத்துள்ளார்.
தனது வீட்டு வளாகத்தில் உருவாக்கப் பட்டுள்ள இந்தக் குளத்தால், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருக்கும் நிலத்தடி நீர் மட்டம் அனைத்தும் உயர்ந்துள்ளது.

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் மகத்துவத்தை உணரத் தொடங்கி யுள்ளனர். இதற்காக பெரும்பள்ளி மாஸ்டரின் இந்த செயலைப் பார்த்த கிராம மக்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

சிறிய செக்டேம் போன்று அமைக்கப் பட்டுள்ள இந்தக் குளத்தில் சிறுவர்கள், பெரியவர்கள் வரை குளித்து மகிழவும் அனுமதித்துள்ளார்.

இது குறித்து இந்த மழைநீர் சேகரிப்பால் பலன் அடைந்த பி.ஷமீர் கூறுகையில், பெரும்பள்ளி மாஸ்டர் இந்தக் குளத்தை உருவாக்குவ தற்கு லட்சக் கணக்கில் செலவு செய்துள்ளார்.

அது மட்டு மல்லாமல், கிராம மக்களுக்கு நலம் பயக்கும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங் களிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சி களையும் நடத்துவார். 

இயற்கை வழி விவசாயத்தின் முக்கியத் துவத்தையும் மக்களுக்கு அறிவுறுத்தி வந்தார். 

மழைநீர் சேமிப்பு குறித்து மாநில அரசு பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பெரும்பள்ளி மாஸ்டர் தனி ஆளாகச் சாதித்துள்ளார் எனத் தெரிவித்தார்.
தனி ஆளாக இருந்து மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் மகத்துவத்தை உணர்த்திய பெரும்பள்ளி மாஸ்டருக்கு கிராம பஞ்சாயத்து சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப் பட்டது.

பஞ்சாயத்துத் தலைவர் கருவல்லி ஹபிபா, நிலைக்குழுத் தலைவர் பி.பி.ரம்யா ராம்தாஸ், செயலாளர் பி.கே.ராஜீவ், உள்ளிட்டோர் நினைவுப் பரிசை வழங்கி பெரும்பள்ளி மாஸ்டருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings