சட்டப் பேரவை வந்த உதயநிதி ஸ்டாலின் !

0
திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அவ்வப்போது அரசியல் போராட்டங்களில் அவர் கலந்து கொண்டு வருகிறார். 
சட்டப் பேரவை வந்த உதயநிதி ஸ்டாலின் !
திமுக பிரமுகர்கள் இல்ல நிகழ்ச்சிகளிலும் கூட உதயநிதி ஸ்டாலினைப் பார்க்க முடிகிறது.

அப்படி போராட்டக் களங்களில் தென்பட்ட உதயநிதி நான் கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன் என்னை திமுக-காரனாகப் பாருங்கள். 

இனி அடிக்கடி என்னை பொது மேடைகளில் போராட்டக் களங்களில் பார்க்கலாம் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்.

கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி என்ற வரிசையில் உதய நிதியும் ஒருநாள் பதவியில் கவுரவிக்கப் படுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது தான். 

ஆனால், அதற்கான காலம் மிக விரைவில் கைகூடும் சூழல் உருவாகி விடும் போலிருக் கிறது. நேற்று தஞ்சையில் நடைபெற்ற திமுக பிரமுகர் அன்பில் தர்மலிங்கம் இல்லத் திருமண விழாவில் 

தந்தையும் மகனும் மேடையில் பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர் வலைகளை ஏற்படுத்தியது. திருமண விழாவில் பேசிய உதயநிதி, இந்த திருமணத்துக்கு நான்தான் தலைமை வகிப்பதாக இருந்தது. 
அதனை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடைசி நேரத்தில் தட்டி பறித்து விட்டார் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், வெளிநாடு செல்ல விருந்ததால் உதயநிதிக்கு தலைமையேற்க வாய்ப்பு கொடுக்கப் பட்டது. 

அந்த பயணம் ரத்து செய்யப் பட்டால் எனது தலைமையில் விழா நடை பெறுகிறது. திமுக குடும்ப விழாவில் என்னுடைய தலைமைப் பொறுப்பை யாராளும் தட்டிப் பறிக்க முடியாது. 

ஆளும் வளரனும், அறிவும் வளரணும் என்றார். அப்போது குறுக்கிட்ட உதயநிதி, தனக்கு இரண்டும் வளர்ந்திருக்கு என்றும், அனுபவமும் வளர்ந்திருக்கு என்றும் கூறினார்.

ஸ்டாலின் உதயநிதியின் இந்த மேடைப்பேச்சு ஹாட் டாப்பிக் ஆனது. அந்த டாப்பிக்கை நீர்த்து போகவிடாமல் ஹாட் பேக்கில் வைப்பதுபோல் ஸ்டாலின் ஒரு வாக்குறுதியும் தந்தார்.
விழாவில் பேசிய ஒரத்தநாடு எம்.எல்.ஏ. எம்.ராமச்சந்திரன், உதயநிதிக்கு திமுகவில் பொறுப்பு வழங்க வேண்டும். 

அவருக்கு பொறுப்பு வழங்குவதில் தவறில்லை என்றார். சிலர் மனைவியை அரசியல் வாதியாக்கும் போது, இது தவறே இல்லை என்று கூறினார்.

அதற்கு ஸ்டாலின், உரிய நேரம் வரும் போது உதயநிதி க்கு வாய்ப்பும், பதவியும் அதுவாகவே வந்து சேரும் என்றார்.

ஸ்டாலின் பாணியிலேயே சொல்ல வேண்டு மானால்.. ஆக.. உள்ளபடியே உதயநிதி அரசியலுக்கு வரும் நேரம் வந்து விட்டது போலும்!

இந்த சுடச்சுட வரிசையில் சேர்ந்து கொண்டுள்ளது இன்று உதயநிதி ஸ்டாலின் சட்டப் பேரவைக்கு வந்தது. 
அவரது நண்பர் அன்பில் மகேஷ் பேச்சைக் கேட்பதற்காக சட்டப் பேரவை வந்த உதயநிதி தனது தந்தை பேசுவதையும் கேட்பதற் காக சுமார் 1 மணி நேரம் சட்டப் பேரவை கேலரியில் இருந்தார்.

இன்று கேலரியில் இருப்பவர் நாளை எம்.எல்.ஏ., வரிசையி லும் இருக்கலாம். ஓகே ஓகே பட ஓப்பனிங் போல சட்டப் பேரவையும் உதயநிதி க்கு ஓகே ஓகே அகிறதா என்று பார்ப்போம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings