டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அந்த வீட்டில் இருந்து இரண்டு டயிரிக்கள் கைப்பற்றப் பட்டன. அந்த டயிரிக் குறிப்புகளை வைத்தே போலீஸார் விசாரணையை நகர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டின் மூத்த பெண்மணியான நாராயண தேவியின் இளைய மகன் லலித் பாட்டியாவின் தூண்டுதலின் பேரிலேயே இந்த தற்கொலைகள் நடந்திருக்க லாம் என போலீஸார் சந்தேகப் படுகின்றனர்.
லலித் பாட்டியா (45) தனது தொழிலில் இருந்த விரோதியால் பேசும் திறனை இழந்திருக்கிறார். இந்நிலையில் தனது குரல் திரும்பக் கிடைக்க அவர் பல்வேறு முயற்சி களையும் செய்திருக்கிறார்.
அப்போது தான் அவரது தந்தை கனவில் வந்து சில பூஜைகளை செய்யுமாறு லலித் பாட்டியாவிடம் கூறியதாக குறிப்பு எழுதி வைத்தி ருக்கிறார்.
அந்த பூஜைகளு க்குப் பின்னர் லலித்துக்கு பேச்சு வந்துள்ளது. அதன் பின்னர் கனவில் தந்தை அடிக்கடி வருவது குறித்து லலித் பேசி யிருக்கிறார்.தந்தை கூறியதாக அவர் நிறைய குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார்.
அப்படி, லலித் பாட்டியா எழுதி வைத்த குறிப்பில், உங்களுடைய கடைசி நேரத்தில் உங்களது கடைசி ஆசை நிறைவேறும் தருணத்தில் இந்த வானம் பிளந்து கொள்ளும் பூமி நடுங்கும்.
நீங்கள் அப்போது அச்சப் படாதீர்கள். சத்தமாக மந்திரத்தை முழங்குங்கள். நான் வந்து உங்கள் அனைவரை யும் காப்பாற்றுவேன்" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
லலித் இவ்வாறு எழுதும் குறிப்புகள் அனைத்துமே தனது தந்தை தனக்குக் கூறியது என்றே கூறி வந்திருக்கிறார்.
ஒட்டு மொத்த குடும்பமும் மூடநம்பிக்கையில் மூழ்கியிருந்தது போலீஸ் கைப்பற்றிய டைரியில் இருந்து தெரிய வந்திருக்கிறது. பாட்டியா குடும்பத்தினர் உலகம் விரைவில் அழியப் போவதாகவும் நம்பி வந்துள்ளனர்.
நடந்தது என்ன?
வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 பேர் கடந்த ஞாயிற்றுக் கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
நாராயண் தேவி (77) என்ற மூதாட்டி ஒரு அறையில் தரையில் இறந்து கிடந்தார். இவரது மகள் பிரதிபா (57), மகன்கள் பாவ்னேஷ் (50), லலித் பாட்டியா (45). பாவ்னேஷின் மனைவி சவீதா (48),
இவர்களுடைய குழந்தைகள் மீனு (23), நிதி (25), துருவ் (15). லலித் பாட்டியா வின் மனைவி டினா (42). இவர்களுடைய மகன் சிவம் (15). தவிர பிரதிபாவின் மகள் பிரியங்கா (33). இவர்கள் 10 பேரும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.
இதில் பிரியங்கா வுக்கு கடந்த மாதம் தான் நிச்சய தார்த்தம் நடந்துள்ளது. இந்த ஆண்டில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
Thanks for Your Comments