என் தெய்வம் என்னுடனே உள்ளது - இறந்த மனைவிக்கு வீட்டில் சிலை !

0
புற்று நோயால் இறந்த மனைவியின் ஞாபகார்த்தமாக அவரது முழு உருவச் சிலையை வீட்டில் வைத்து தினமும் வணங்கி வருகிறார் கணவர். 
தனது தெய்வம் எப்போதும் என்னுடன் தான் உள்ளது என்று அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

மதுராந்தக த்தை அடுத்த மாமண்டூரில் உள்ள தென்பாதி கிராமத்தில் வசிப்பவர் ஆசைத்தம்பி (62). இவரது மனைவி பெரியபிராட்டி (55). 

இவர்களுக்கு 1977-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு மகள்கள் உள்ளனர். 

திருமணத்தின் போது சாதாரண ஏழ்மை நிலையிலிருந்த ஆசைத்தம்பி, மனைவி பெரிய பிராட்டியின் வழி காட்டுதல் ஆலோசனை 

உதவி காரணமாக உழைப்பால் உயர்ந்து சொந்தமாக மளிகைக் கடை வைக்கும் அளவுக்கு வளம் பெற்றார்.

மனைவி மகள்கள் மீது அளவற்ற பாசம் கொண்ட ஆசைத்தம்பி மகள்களை அவர்கள் விருப்பம் போல் வளர்த்துத் திருமணம் செய்து கொடுத்தார். 

மளிகைக் கடையை மூடிவிட்டு வந்தால் மனைவி யுடன் அளவளாவு வதிலேயே அதிக நேரத்தை செலவழிப்பார். 

சந்தோஷமாக சென்றுக் கொண்டிருந்த வாழ்க்கையில் துக்கக் கரமாக கடந்த ஆண்டு 

திடீரென புற்று நோயால் தாக்கப்பட்ட பெரிய பிராட்டி சிகிச்சை பலனளிக் காமல் உயிரிழந்தார்.

இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. மனைவியை 40 ஆண்டு காலம் பிரியாமல் வாழ்ந்த ஆசைத்தம்பி நொறுங்கிப் போனார். 

மனைவியை கொடுமைப்படுத்தி, வாழ்நாள் முழுதும் நரக வாழ்க்கையை அளிக்கும் கணவர்கள் மத்தியில் 

மரணத்திற்கு பின்னும் மனைவியை நினைத்து உருகிய ஆசைத்தம்பி மனதில் அந்த எண்ணம் தோன்றியது.

தனது மனைவிக்கு சிலை வைத்து வீட்டில் வைக்க வேண்டும் என்ற வித்யாச மான அவரது எண்ணத்தை மற்றவர் களிடம் சொன்ன போது 

“என்னப்பா தலைவர் களுக்குத் தான் சிலை வைப்பார்கள் நீ மனைவிக்கு போய் சிலை வைக்கிறேன்னு சொல்றியே” என்று சிரித்தனர். 


ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த ஆசைத்தம்பி தனது மனைவிக்கு சிலை வைக்கும் வேலையில் இறங்கினார்.

அவரது மனைவியின் உயரம் 5 அடி 1 அங்குலம். அதே உயரத்தில் அவரது உடல்வாகு அளவிலேயே சிலை செய்ய சொன்னார். 

இதை யடுத்து அவரது மனைவி சிலை ரெடியானது. அச்சு அசல் அவரது மனைவியின் உருவத்தில் இருக்கும் 

சிலைக்கு பட்டுப் புடவைக்கட்டி, தாலி, செயின்களை அணிவித்து வீட்டின் நடுவில் வைத்து வணங்கி வருகிறார் ஆசைத்தம்பி.

தினமும் 4 மணி நேரம் என் மனைவியுடன் பேசுவேன், அவர் மறைய வில்லை என் தெய்வம் என்னுடன் தான் இருக்கிறது. 

காலையில் குளித்து முடித்து பூஜை செய்த பின்னர் சிறிது நேரம் பேசுவேன், 

பின்னர் இரவு மளிகைக் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வந்த பின்னர் பேசிக் கொண்டிருப்பேன் என்று தெரிவித்தார்.

தனது தந்தையின் எண்ணத்துக்கு உதவியாக இரண்டு மகள்களும் தாயின் சிலையை வணங்கி வருகின்றனர். 

மனைவி இறந்தபின்னர் அவர் தன்னுடன் வாழ்வதாக எண்ணும் கணவர், இந்த காலத்தில் ஆச்சர்யமான ஒரு நிகழ்வு தான்.

மனைவியின் சிலையை செய்து அவருடன் பேசுவது மற்றவர் களுக்கு வேடிக்கை யாக தெரியலாம், 

ஆனால் அது உளவியல் ரீதியாக அவருக்கு தெம்பைத் தரும் செயல் அவர் முதுமையில் உற்சாகத்துடன் செயல்பட உதவும் என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings