ஜனாதிபதி அப்துல் கலாமின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் !

0
இளமைக் காலத்தில் செய்தித் தாள்களை வீடுகளுக்கு போடும் சிறுவனாக இருந்து தனது கடின உழைப்பு, விடா முயற்சி, 
தான் வகித்த அத்தனை பணிகளிலும் நேர்மை, முழு அர்ப்பணிப்பு, ஈடுபாடு, அது மட்டுமல்ல தன் உயிரினும் மேலாக 

தன் தேசத்தை நேசித்து ராமேசுவரத்தி லிருந்து ஜனாதிபதி மாளிகை வரை உயர்ந்த மக்களின் ஜனாதிபதி 

ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அனைத்து இளைஞர் களுக்கும் ஓர் ஊக்கசக்தி என்றால் அது மிகையாகாது.

“கனவு காணுங்கள்“ என்கிற ஒற்றை வார்த்தையின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர். 

இந்திய நாட்டு மக்கள் வறுமையின்றி வாழ வேண்டும் என்று கனவு கண்டார். 

ஒவ்வொரு இந்தியனையும் நாடு முன்னேறு வதற்கு ஆக்கப் பூர்வமான செயல்களை உருவாக்க கனவு காணச் செய்தார்.

இந்த உலகில் பலர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து விடுகிறார்கள். இவர்களில் பலரை அவர்கள் குடும்பமே மறந்து விடுகிறது. 

ஆனால் நாட்டின் முன்னேற்றத் திற்காக உழைத்த சாதனை யாளர்களை இந்த உலகம் மறப்பதே இல்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அப்துல்கலாம்.

தனது ஆரம்பக் கல்வியை மண்டபம் அரசு தொடக்கப் பள்ளியிலும், உயர் நிலைக் கல்வியை ராமநாதபுரம் ஸ்வார்டஸ் பள்ளியிலும் கற்று தேர்ந்தார். 

அடுத்து கலாம் கல்லூரியில் சேர்ந்து படிக்க திருச்சி சென்றார், அங்கு செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். 

கல்லூரி படிப்பு முடிந்ததும், மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி இருந்தது. சென்னை எம்.ஐ.டியில் விண்ணப் பித்தார். 

கல்லூரியில் சேர அழைப்பு கடிதம் வந்தது, ஆனால் அதற்கான கட்டணத்தை செலுத்த கலாமின் பெற்றோரால் முடிய வில்லை. 

ஆனால் கலாம் அவர்களின் அக்கா கட்டணத்தை செலுத்த உதவினார். 


கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கி இறுதி ஆண்டு பயிற்சிக்கு பெங்களூரு வில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் சேர்ந்தார். 

அதில் விமானத்தை பழுது பார்த்தல் சம்மந்தமான அத்தனையும் தெரிந்துக் கொண்டார். 

விமானியாக வேண்டும் என்று கனவு கண்டு அதற்கான முயற்சி எடுத்து, அதற்கான நேர் காணலுக்கு சென்றார், 

நேர்காணலில் தோல்வி அடைந்தார். விஞ்ஞானியாக வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை தீர்மானித்தார்.

டெல்லியில் மற்றொரு பணியான முதுநிலை விஞ்ஞானி உதவியாளர் பணி கிடைத்தது. 

தான் விமானி ஆகமுடிய வில்லை என்றாலும், விமானத்தை உருவாக்கும் பணி கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தார். 

வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்கு வடிவமைத்து கொடுத்தார். 

பின்னர் இஸ்ரோவில் தனது ஆராய்ச்சி பணிகளை தொடர்ந்த அவர், 1980-ம் ஆண்டு ரோகினி ஏவுகணையை விண்ணில் செலுத்தி வெற்றி கண்டார். 

இது அவருக்கு மட்டும ல்லாமல் இந்தியா விற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இதை பாராட்டி மத்திய அரசு 1981-ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. 

1999-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார், 

அதன் மூலம் இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றினார் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். 

1997-ம் ஆண்டு மத்திய அரசு பாரதரத்னா விருது வழங்கி கவுரவ படுத்தியது. 

2002-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். 

2007-ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்து தனது சிறப்பான பணியில் 

மக்களின் அன்பை பெற்று மக்களின் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப் பட்டார். 

குடியரசுத் தலைவர் பணிக்கு பின்பு தான் மிகவும் விரும்பிய ஆசிரியர் பணியை மீண்டும் அண்ணா பல்கலைக் கழகத்தில் தொடர்ந்தார்.

அவர் ஒவ்வொரு முறையும் இளைஞர் களிடம் சொல்வது “நம்மால் முடியும்“ என்ற தன்னம் பிக்கையை 

உற்சாகத்தை ஊக்கத்தை நமக்குள்ளே உருவாக்கி கொண்டால், நமது நாட்டை வளர்ந்த நாடாக மிளிரச் செய்யலாம். 

உயரப்பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழி வகுக்கும். 

அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும்? அதற்கு கலாம் சொல்கிறார்,

 “உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக் கட்டும்“, லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு. 


அதை அடைய உழைப்பு முக்கியம். உழை, உழைத்துக் கொண்டேயிரு. விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.

இளைஞர் களுக்கு ஒரு லட்சிய கனவு வேண்டும். அந்த கனவு மூலமாக நம் பாரத நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பாதைக்கு 

அழைத்து செல்ல இளைஞர் களால் தான் முடியும் என்று உறுதியாக சொன்னவர், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

இன்றைய இந்தியாவின் மக்கள் தொகையில் 60 கோடி பேர் இளைஞர்கள், இந்த இளைய சமுதாயம் 

ஆக்கப் பூர்வமான செயல் திறத்தோடு ஊக்கத்தை யும் கைக் கொண்டால் எந்த வொரு சக்தியாலும் 

நாம் வளர்ந்த நாடாவதைத் தடுக்க இயலாது என்பதை உரக்க சொன்ன டாக்டர் கலாம். 

2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் நாள் ‘ஜீல்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பேசிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து மறைந்தார். 

குழந்தை களுடன், மாணவர் களுடன் உரையாடுவதை எப்போதுமே விரும்பிய, 

அவர்கள் மனம் கவர்ந்த கலாம், தன் உயிர் பிரியும் தருவாயிலும் மாணவர் களிடம் உரையாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. 

உலகில் எத்தனை சக்திகள் இருந்தாலும் மன எழுச்சி கொண்ட இளைஞன் தான் மிகப்பெரிய சக்தி என்று 

உலகிற்கு உணர்த்திய கலாம் இளைஞர்களின் ஊக்கசக்தி என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப் படுகிறது. 

நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் அருகே பேக்கரும்பு பகுதியி லுள்ள அவரது நினைவு மண்டப த்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், 

பொது மக்கள், மாணவ மாணவிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings