13 ஆண்டுக்கு பின் தாய்க்கு கிடைத்த நீதி - லாக்-அப் மரண வழக்கு !

0
திருவனந்தபுரம் அருகே கரமனை, நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி. இவரது மகன் உதயகுமார், (வயது 30). 
திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட் பட்ட பகுதியில் உள்ள இரும்புக் கடையில் உதயகுமார் சுமை தூக்கும் தொழிலாளி யாக வேலை பார்த்து வந்தார். 

கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி இரவில் உதய குமாரும், அவரது நண்பர் சுரேஷ்குமார் என்பவரும் ஸ்ரீகண்டேஷ்வரம் பகுதியில் நடந்து சென்றனர்.

அவர்களை கோட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். 

சுரேஷ்குமார் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

உதயகுமார் கையில் ரூ.4 ஆயிரம் பணம் இருந்தது. 

இதனால் அவரையும் போலீசார், போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் பணம் வைத்திருந்தது பற்றி கேட்டனர். 

அவர், ஓணம் பண்டிகைக் காக கடை உரிமையாளர் அளித்த போனஸ் பணம் என்று கூறினார்.

இதை நம்ப மறுத்த போலீசார் அவரை அடித்து உதைத்தனர். மறுநாள் அவரை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி க்கு கொண்டு சென்றனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி உதயகுமார் இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து உதயகுமாரின் தாயார் போலீசில் புகார் செய்தார். 

போலீசார் மகனை அடித்து கொன்று விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனு கொடுத்தார்.

அந்த மனு மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனக்கூறி பிரபாவதி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

அதனை விசாரித்த கோர்ட்டு உதயகுமார் மரணம் தொடர்பான மர்மத்தை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விட்டது. 

இதை யடுத்து உதயகுமார் சாவு குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது.

சி.பி.ஐ. விசாரணையில் திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் 

மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது.


இதில், சப் -இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் ஆகியோருக்கு வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதா கவும், 

மற்றவர்கள் சதி திட்டம் தீட்டுதல், ஆதாரங்களை அழித்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் 

போன்ற குற்றங்களில் ஈடுபட்டதை சி.பி.ஐ. கண்டுபிடித்து சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று அறிவித்தது. 

இதில், குற்றம் சாட்டப்பட்ட சப்- இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் 

மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் அறவித்தார்.

இதில், ஏட்டு சோமன் இறந்து விட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப் படுவதாக கூறினார். 

குற்றவாளி களாக அறிவிக்கப் பட்ட அனைவரு க்கும் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப் பட்டது. 

உதவி எஸ்.ஐ ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகிய மூவருக்கும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

தண்டனையை கேட்டதும் ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் கோர்ட் அறையிலேயே கதறி அழத்தொடங்கினர். 

இதனை அடுத்து, அவர்கள் சிறைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளனர்.

தனது மகன் கொல்லப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பின்னர் தனக்கு உரிய நீதி கிடைத்துள்ள தாக உதய குமாரின் தாய் பேட்டி யளித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings