ட்ரோன்களால் பாத்ரூம் செல்ல முடியாத பெண்கள்... தூத்துக்குடியில் !

0
ட்ரோன்களால் பாத்ரூம் செல்ல முடியாமல் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, 100 நாட்களைக் கடந்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். 
ட்ரோன்களால் பாத்ரூம் செல்ல முடியாத பெண்கள்... தூத்துக்குடியில் !

இந்நிலையில் ஆட்சியர் அலுவல முற்றுகை போராட்டத்தின் போது, காவல் துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இதன் உச்ச கட்டமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் சிக்கி 13 பேர் உயிரிழந் துள்ளனர். 


இதை யடுத்து கமாண்டோ படை குவிக்கப் பட்டு, தூத்துக்குடி நகரம் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட் டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் 

உணவு மற்றும் அடிப்படை தேவை களுக்காக தவித்து வருகின்றனர். இந்நிலையில் அசம்பா விதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க, ட்ரோன் கேமிராக்கள் மூலம் கண்காணிக்க காவல் துறை திட்ட மிட்டுள்ளது.

இதன்மூலம் ஒவ்வொரு தெருக் களையும், சாலை களையும் கண்காணித்து வருகின்றனர். தென் மாவட்டங்களில் கழிவறைகள் இல்லாமல் பெண்கள் தவித்துக் கொண்டி ருக்கின்றனர்.

இந்நிலையில் ட்ரோன்களின் கண் காணிப்பால் பெண்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 509ன் கீழ், பெண்களின் மாண்பை குலைக்கும் செயல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings