தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இன்னும் பிரேத பரிசோதனை நடந்து வரும் நிலையில் அதிமுக தலைவர்
மது சூதனின் பிறந்த நாளில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தூத்துக் குடியில் ஸ்டெர்லைட் நிறுவன த்தை எதிர்த்து 100 வது நாள் போராட்ட த்தில் ஈடுபட்டு இருந்த போராட்டக் காரர்கள் மீது போலீஸ் காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 13 பேர் இதுவரை பலியாகி யுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து, இன்னும் மருத்துவ மனியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி, விவாதத்திற்கு உள்ளாகி யுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி அளித்தது யார் என்பதே இன்னும் வெளி யாகாத நிலையில், துக்கத்தில் சொந்தங் களை இழந்து தவித்துக் கொண்டி ருக்கும் தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு முதல்வரோ,
துணை முதல்வரோ அல்லது அமைச்சர்களோ செல்லாமல் உள்ளனர். இது மக்களிடையே இன்னும் ஆத்திரத்தை கிளப்பி யுள்ளது. 144 தடை இருப்பதால் அங்கு செல்லக் கூடாது என்று முதல்வர் பேசுகிறார்.
144 தடை முதல்வருக்கோ, அமைச்சர் களுக்கோ பொருந்தாது என்பது முதல்வருக்கே தெரியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Tuticorin violence: 13 killed, 102 injured but Deputy CM EPS attends birthday parties as Makkal demands accountability #MakkalMocked pic.twitter.com/IwR4PBWWt7— TIMES NOW (@TimesNow) May 25, 2018
இந்த நிலையில், இன்று பிறந்த நாள் கண்ட அதிமுக மூத்த தலைவர் மதுசூதனின் வீட்டுக்கு சென்று அவரை வாழ்த்தி யுள்ளார் துணை முதல்வர் பன்னீர் செல்வம். இதற்கு முன்னதாக திருமண விழாவிற்கும் சென்று வந்துள்ளார்.
துக்கத்தில் துவண்டு வரும் தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல், பிறந்த நாள் கொண்டா ட்டத்தில் அதிமுக தலைவ ர்களும்,
அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் கலந்து கொண்டு இருப்பது பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனக் குரல்களை எழுப்பி யுள்ளது.
இந்த செய்தியை டைம்ஸ் நவ் தொலைக் காட்சி வீடியோ ஆதாரத்துடன் வெளியிட் டுள்ளது.
Thanks for Your Comments