குழந்தை திருடு போவதை தடுக்க புதிய தொழில் நுட்பம் !

அரசு மருத்துவ மனைகளில் பச்சிளம் குழந்தைகள் திருடப் படுவதை தடுக்க தாய் உள்பட மூன்று பேருக்கு 

குழந்தை திருடு போவதை தடுக்க புதிய தொழில் நுட்பம் !
டிஜிட்டல் அடையாள டேக் பொருத்தப் படுகிறது. இந்த திட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழக த்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் குழந்தைத் திருட்டைத் தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்படி பிறந்த குழந்தை, தாய் மற்றும் மருத்துவ மனையின் குழந்தை பராமரிப்பவர் ஆகிய மூவரு க்கும் இந்த டிஜிட்டல் அடையாள டேக் பொருத்த ப்படும்.

இதன் மூலம் குழந்தையை அதன் இருப்பிட த்தில் இருந்து முறை கேடாக எடுத்துச் செல்லும் போது, 

பொருத்தப் பட்டிருக்கும் கருவி அலாரம் ஒலியை எழுப்பச் செய்வதோடு மட்டு மில்லாமல், அருகில் இருக்கும் காவல் துறைக்கும் அலர்ட் செய்து விடும். அதோடு இல்லாமல், 

கருவியில் இருக்கும் ஜி.பி.ஆர்.எஸ் ட்ராக் சிஸ்டத்தின் மூலம் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதையும் காட்டிக் கொடுத்து விடும்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் ஒரு குழுவினர் வடிவமைத் துள்ள இந்தக் கருவி, அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து தமிழக த்தில் இதுவரை 46 பச்சிளம் குழந்தைகள் திருடப் பட்டுள்ளன என்பது நினைவில் கொள்ளத் தக்கது.
Tags:
Privacy and cookie settings