மதுரையில் நீட் தேர்வு மாணவிக்கு கார் டிரைவர் செய்த உதவி !

மதுரையில் ஹால்டிக்கெட் எடுத்துவர மறந்த மாணவியை காரில் அழைத்துச் சென்று தேர்வு எழுத உதவிய கார் டிரைவருக்கு அங்கிருந்த பெற்றோர்கள் கண் கலங்கி பாராட்டு தெரிவித்தனர். 
மதுரையில் நீட் தேர்வு மாணவிக்கு கார் டிரைவர் செய்த உதவி !
மதுரையில் உள்ள மையங் களில் பெரும்பாலும் வெளி மாவட்டங் களைச் சேர்ந்த மாணவர்களே தேர்வு எழதுகிறார்கள். 

பல்வேறு சிரமங் களுடன் காலை யிலேயே தேர்வு மையங் களுக்கு மாணவ - மாணவியர் தங்களது பெற்றோர் களுடன் வந்து சேர்ந்தனர். 
இந்நிலை யில் மதுரை மேலூர் சூரக்குண்டையைச் சேர்ந்த அழகர்சாமி- தனலெட்சுமி என்ற 

தம்பதியின் மகள் டயானா நீட் தேர்வு எழுத அம்மா தனலெட்சுமி யுடன் மதுரை பசுமலை செளராஸ்ட்ரா கல்லூரிக்கு வந்துள்ளார்.

இந்நிலை யில் தேர்வு நுழைவு சீட்டை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வந்துள்ளார். 

இதனால் தேர்வு அறைக்கு அனுமதிக்கப் படாத டயானா கல்லூரி வளாகத்தில் அழுது கொண்டி றிந்தார். 
இதை பார்த்த டிரைவர் மணி என்பவர் அந்த மாணவிக்கு உதவி செய்யும் விதமாக அவரின் காரில் ஏற்றிக் கொண்டு டயானா வின் 

வீட்டிற்கு சென்று நுழைவு சீட்டை எடுத்து காரிலேயே அழைத்து வந்து தேர்வு எழுதும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்த்தார். 

மேலூர் சூரக்குண்டு பசுமலையில் இருந்து 35 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் .ஆனால் 35 நிமிடத் தில் அவரை காரில் கூட்டிச் சென்று நுழைவுச் சீட்டை எடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது. 
இதனால் மாணவி டயானா டிரைவர் மணிக்கு கண்ணீருடன் நன்றி சொன்னார். டயானாவின் அம்மா தனலெட்சுமி டிரைவருக்கு காசு கொடுத்துள்ளார் .
சுங்க சாவடியில் பாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்துவது எப்படி?
அதை கூட வாங்க மறுத்து மணி உதவி செய்தார். இதனால் அங்கிருந்த பெற் றோர்கள் கைகுலுக்கி பாரட்டினர். 

எந்த பலனும் எதிர் பார்க்காமல் காலத்தால் செய்த இவர் செய்த உதவியை பாராட்டு வோம் நண்பர்களே..!
Tags: