டி.எஸ்.பி. விஷ்ணு பிரியாவின் தற்கொலை வழக்கு... கைவிட்ட சிபிஐ !

0
கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான, டி.எஸ்.பி. விஷ்ணு பிரியாவின் தற்கொலை வழக்கை, முடித்து வைப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 
டி.எஸ்.பி. விஷ்ணு பிரியாவின் தற்கொலை வழக்கு... கைவிட்ட சிபிஐ !

இது குறித்து, கருத்து தெரிவிக்கு மாறு, விஷ்ணு பிரியாவின் தந்தைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை, டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா விசாரணை நடத்தி வந்தார். 

இந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்த நிலையில், அதிகாரிகள் நெருக்கடி காரண மாகவே விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்ட தாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனை யடுத்து, இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப் பட்டது. கடந்த டிசம்பரில் விசாரணையை முடித்த சிபிஐ, கோவை முதன்மை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில், 


அறிக்கை தாக்கல் செய்தது. அதில், விஷ்ணு பிரியாவின் மரணம் தற்கொலை என்றும், அதற்கு யாரும் காரணம் இல்லை என்பதால், விசாரணையை முடித்து கொள்வதாகவும் கூறப் பட்டிருந்தது.

இந்த நிலையில், சிபிஐ அறிக்கையை சுட்டிக்காட்டி, விஷ்ணு பிரியாவின் தந்தைக்கு கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. 

அதில், இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் கூற விரும்பி னால் வரும் 9 ஆம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராகி தெரிவிக் குமாறு உத்தர விடப்பட் டுள்ளது.


இதனிடையே, சிபிஐ அறிக்கையை படித்து பார்த்த பின்னரே, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளதாக விஷ்ணு பிரியாவின் தந்தை ரவி தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)