ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும்: கமல்ஹாசன் !

0
கர்நாடகத்தில் தோன்றி யிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு என்று மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும்: கமல்ஹாசன் !
கர்நாடகத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை. 104 உறுப்பி னர்கள் கொண்ட பாஜக 

ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் வழக்கு தொடர்ந்தது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இன்று மாலை 4 மணிக்குள் எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தர விட்டது. 

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொலைக் காட்சிகளில் நேரலை யாக ஒளிபரப்ப வேண்டும் எனவும் உத்தர விடப்பட்டது.
இந்நிலையில் எடியூரப்பா அரசுக்கு 104 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பெரும் பான்மையை நிரூபிக்க இன்னும் 7 எம்எல்ஏ க்கள் ஆதரவு தேவை. 

ஆனால், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து எம்எல்ஏ க்களை இழுக்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது.

இதனால் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் முன்பே பெரும் பான்மையை நிரூபிக்கும் 

அளவுக்கு எம்எல்ஏ க்கள் இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவ ர்களும் கருத்து தெரிவித்து ள்ளனர்.
இது தொடர்பாக கமல் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''கர்நாடகத்தில் தோன்றி யிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு'' என்று தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)