உலகின் முதல் ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை !

அமெரிக்காவில் போரில் காயமடைந்த ராணுவ வீரருக்கு விதைப்பையுடன் ஆண்குறி, அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மாற்றப் பட்டுள்ளது. 
உலகின் முதல் ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை !
அமெரிக்கா வின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக மருத்துவ மனையில் இந்த அறுவை சிகிச்சை மார்ச் மாதம் நடை பெற்றதாக வும், 

விதைப்பையுடன் ஆண்குறி மாற்றப் பட்ட ஆப்கானிஸ்தான் போரில் படுகாயமடைந்த அமெரிக்க ராணுவவீரர் தற்போது நலமுடன் உள்ளதாகவும், மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.

விந்தணுக் களை உருவாக்கும் விதைக் கொட்டை களை மாற்றுவது அறவிழுமி யங்களை கோரக் கூடியது என கூறியுள்ள மருத்து வர்கள், 

விதைப் பையை மாற்றிய போதும், அறம் சார்ந்த கேள்விகள் எழுவதை தவிர்ப் பதற்காக விதைக் கொட்டை களை மாற்ற வில்லை என்றும் தெரிவித் துள்ளனர்.

மார்ச் 26ம் தேதி நடைபெற்ற 14 மணி நேர அறுவை சிகிச்சையில் 9 பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் மருத்து வர்களும், 2 சிறுநீரகப் பிரிவு மருத்துவர்கள் பங்கேற் றுள்ளனர். 
இத்தகைய அறுவை சிகிச்சை களில் இது மிக முக்கியமான ஒன்று என்று கூறியுள்ள மருத்துவ மனை தரப்பு, 

ஆண் குறியை தான மளித்தவர் யார் என்பது குறித்த தகவல் களை வெளியிட மறுப்பு தெரிவித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings