பார்க்கின்சன் நோய் எதனால் வருகிறது?

ஓடுகிற தண்ணீர் ஓரிடத்தில் நின்று விட்டால் பாசி பிடித்து விடும். அப்படியே தான் மனிதர்களும், மனிதர்கள் ஓடிக் கொண்டிருக்கும் வரை தான் உலகத்தோடு ஒன்றி வாழ முடியும். 
இல்லை யென்றால் ஓரம் கட்டி விடுவார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உடலின் இயக்கங்களே காரணம். 

உடல் ஏற்படுத்தும் அனைத்து அசைவு களையும் மூளை தான் கட்டுப் படுத்துகிறது. 

அந்த மூளையில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட மனிதனைப் பெருமளவில் பாதித்து விடும். அப்படி மூளையில் ஏற்படும் ஒரு பிரச்னை தான் 'பார்க்கின்சன்'.
வருடந்தோறும் ஏப்ரல் 11 தேதி உலக பார்க்கின்சன் தினமாக அனுசரிக்கப் படுகிறது. இந்த நாளில் பார்க்கின்சன் நோய் குறித்த விழிப்பு உணர்வு இந்நாளில் பரப்பபடு கிறது. 

இந்த நாளில் மரத்தான் போன்றவை நடத்தப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் பணத்தை இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நன்கொடையாகக் கொடுக் கின்றனர்.

பார்க்கின்சன் என்றால் என்ன?
நரம்பு மண்டல த்தில் ஏற்படும் பாதிப்பே பார்க்கின்சன் நோய் ஏற்பட காரணம். 

நரம்பு மண்டலத்தில் உள்ள டோபமைன் ( Dopamine) எனப்படும் ஹார்மோனே உடலின் இயக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 
இந்த ஹார்மோனின் சுரப்பு குறையும் போது உண்டாகும் நோயே பார்க்கின்சன்.

உடலின் தசை இயக்கத்தைப் பெருமளவில் இந்த நோய் பாதிக்கிறது. பேசுவது, எழுதுவது, பார்ப்பது போன்ற வற்றிற்குக் கூட இந்நோயால் பாதிப்பட்டவர், மிகவும் சிரமப்படுவார்.

இந்தியா வில் கிட்டத் தட்ட ஒரு மில்லியனு க்கும் மேற்பட்ட மக்கள் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். பெரும்பாலும் 50-60 வயதுள்ள வர்கள் இந்நோயால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.

காரணம்:
இந்நோய்க்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இதைக் குறித்த ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.   
சுற்றுச் சூழல், வயதாவது மற்றும் அசாதாரண மான ஜீன்கள் போன்ற வற்றால் இந்நோய் ஏற்படலாம் என யூகிக்கப் படுகிறது. இருந்தாலும், நோய்க்கான சரியான காரணத்தைக் குறிப்பிட இயலவி ல்லை.
Tags: